இறைச்சிக்காக தமிழகத்தில் இருந்து
கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் மாடுகள்
இரவில் தூங்கிவிடக்கூடாது என்பதற்காக
அவற்றின் கண்களில் பச்சை மிளகாயை சொருகி
எடுத்துச்செல்லப்படும் புகைப்படங்கள் இவை.
கொண்டு செல்வது இறைச்சிக்காகத்தான்
என்றாலும் கூட அவற்றை கொல்லும் வரையாவது
அவைகளை ஒரு உயிராக நினைத்து
கருணை காட்டலாம்,
ஆனால் அவற்றை வண்டியில் ஏற்றும்போதே,
இறைச்சியை ஏற்றுகின்ற மனநிலையில்
மூட்டையை போல் அடித்து நசுக்கி ஏற்றுவதும்,
இறங்கும் போது தடுமாறும் மாடுகளை
மேலிருந்து தள்ளிவிட்டு கால்களை உடைப்பதும்,
அப்படி உடைந்தாலும் கூட
கொஞ்சநேரத்தில் வெட்டப்போறதுதானே என்ற
மனநிலையில் சித்தரவதைகளை கொடுப்பதும்
தினம் தினம் ஆயிரக்கணக்கில்
நடந்துகொண்டே தான் இருக்கிறது.
அவைகளை கொல்லும் வரையாவது
நம்மை போன்ற யாரோ ஒரு மனிதருக்காக,
உழைத்த கால்நடைகள் அவை,
நம்முடைய உணவுக்காக விவசாயியோடு சேர்த்து
இந்த மாடுகளும்தான் நிறைய
கஷ்டப்பட்டிருக்கிறது என்ற நன்றியுடன்
துன்புறுத்தாமல் நடத்துவது தான்
குறைந்தபட்ச இரக்கம்.
Friday, August 17, 2018
V murugesan
Subscribe to:
Post Comments (Atom)
கார்டூனிஸ்ட் பாலா
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
-
தம்பி பிறந்து நான்கைந்து மாதங்களில், சிவகங்கை அரண்மனைக்கு எதிரான அரங்கில் கலைஞர் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார், அப்பாவும், அம்மாவும் ...
-
வாழ்க்கை ஒரு வட்டம். ஆனால் அந்த வட்டம் கோணல்மானலாகத்தான் இருக்கும் போல. ஆகப்பெரிய உள்ளூர்/வெளியூர் 'மானஸ்த' கம்யூனிஸ்ட் தலைவர்கள்...
-
தயவுசெய்து தற்கொலை செய்துகொள் நாங்கள் சமையலராக இருக்கிறோம் நாங்கள் சமைத்த உணவு உனக்கு வேண்டாமெனில்... நாங்கள் மருத்துவராக இருக்கிறோம் ...
No comments:
Post a Comment