திருமால் வளவனல்ல....
திருமாவளவன்
திருத்திப்படியுங்கள்
திரிபுவாதிகளே !
மண்டியிட
கிருஷ்ணசாமியல்ல
அவன்
மானம்
காக்கும்
எல்லைச்சாமி !
கருவறைக்குள்
நுழைய
அவாளிடம்
அனுமதிபெற்று
பின்
கருப்பனின்
கழுத்தறுக்க
வா !
சேரிக்குள்
சிவனை
பெருமாளை
அனுமதித்துவிட்டு
உன்
சேனைகளை
இங்கு
அனுப்பு !
தீக்குளிப்பதற்கு
முன்...
கவனம்
சர்மா...
தீக்குச்சி
செய்த
குழந்தையின்
அழுக்கு
உன்னை
தீட்டாக்கும்
அபாயம்
உள்ளது !!
- தாகம் செங்குட்டுவன்
( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " ...தொகுப்பிலிருந்து )
No comments:
Post a Comment