Thursday, July 12, 2018

Ameeth k A

டெல்லி: யானை வழித்தடங்களில் உள்ள கட்டடம், விடுதிகளை அகற்ற தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மலைப்பிரதேசங்களில் உள்ள யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் யானை வழித்தடங்களில் உள்ள கட்டுமானங்கள் மற்றும் 400 தனியார் விடுதிகளை அகற்ற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

புதிய கட்டுமானத்துக்கு தடை

யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மழைக்காலங்களில் நீலகிரி மாவட்டத்தில்
18 ஆயிரம் யானைகள் இடம் பெயர்கின்றன. யானைகள் செல்லும் வழியில் புதிய கட்டுமானங்களை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது. யானை வழித்தடத்தில் கட்டுமானத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். யானைகள் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளதால் அவை ஊருக்குள் புகுந்து மக்களுக்கும், பயிர்களுக்கும் பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. யானைகள் வழிமாறி ஊருக்குள் புகுந்து மனிதர்களை தாக்கும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே அதன் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Thanks to
Ramamurthi Ram anna

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...