வாழ்க்கை ஒரு வட்டம். ஆனால் அந்த வட்டம் கோணல்மானலாகத்தான் இருக்கும் போல. ஆகப்பெரிய உள்ளூர்/வெளியூர் 'மானஸ்த' கம்யூனிஸ்ட் தலைவர்கள் முதல் அத்வானி வரை வாட்ச்மேன் வேலை பார்த்த இடம் போயஸ் தோட்டம். அங்கே வளர்க்கப்பட்ட 'துணை முதல்வர்' ஓ.பி.எஸ், இன்று போயும்போயும் மாமி என்ற ஒரே காரணத்தினாலேயே ராணுவ அமைச்சர் ஆகிவிட்ட நிம்மியின் வாசலில் நின்றுவிட்டு பார்க்க அனுமதி கிடைக்காமல் திரும்பியிருக்கிறார். ஜெ முற்பகலில் பிறர்க்கு செய்த 'இன்னா' எல்லாம் அப்பல்லோவுடன் போய்விட்டது என நினைத்தால், பிற்பகலில் அதிமுகவை பல ஆண்டுகளுக்கு துரத்தும் போல!!
தமிழக துணை முதல்வரைதான் நிம்மி மேடம் பார்க்கவில்லையே தவிர, மைத்திரேயனுக்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஏனெனில் என்னதான் ஷூக்கடையில் கால் சைஸ் பார்ப்பவரை போல குனிந்தே கிடந்தாலும் ஓ.பி.எஸ்சிடம் இல்லாத ஒன்று மைத்ரேயனிடம் இருக்கிறது. அது என்னவென்று சரியாக சொல்லிவிட்டீர்கள் என்றால் நீங்கள்தான் #திராவிடம்2.0 ஆள்.
No comments:
Post a Comment