Wednesday, July 18, 2018

சாவித்திரி கண்ணன்

எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தரக் கூடிய நட்புகளில் முக்கியமானது. நடிகர் சிவகுமார் அவர்களுடனான நட்பாகும்.
முதன் முதலாக அவரை சந்திக்க சென்ற போது வீட்டில் அவர் இல்லை. என்னுடைய ”,சங்கராச்சாரியார் கைது சில குழப்பங்களும்,விளக்கங்களும்” என்ற சிறு நூலை வீட்டு பணியாளரிடம் தந்துவிட்டு வந்தேன்.

அடுத்த நாள் அவரிடம் இருந்து போன் வந்தது.” நீங்கள் தான் சாவித்திரி கண்ணனா? உங்கள் புத்தகத்தை முழுதாக படித்து விட்டேன்.ரொம்ப அருமை...”என ஆரம்பித்தவர்,சுமார் ஒரு மணி நேரம் அந்த புத்தகத்தில் தான் அனுபவித்து ரசித்தவற்றை பகிர்ந்து கொண் டார்.

இப்படி ஆரம்பித்த நட்பு கடந்த 13 ஆண்டுகளில் ரொம்ப இறு்க வளந்துவிட்டது.எவ்வளவோ மணிகணக்காக பகிர்ந்துள்ளார்.அவரது சொந்த வாழ்க்கை அனுபவங்களை ரத்தமும், சதையுமாக ஒளிவு மறைவின்றி அவர் விவரிக்கும் போது, அவை எனக்கு வாழ்வியல் பாடமானது.
அவரது புத்தகங்கள், மேடை பேச்சுகள் எல்லாமே சமூகத்திடம் அவர் நிகழ்த்திய உரையாடல்கள் தான்!

முந்தா நாள் அவரை சந்தித்து பேசிய போது,”ஒவியம் என்பது உங்கள் பிறவிக் கலையாய் இருந்தது! அதை கடந்து 40 ஆண்டுகளாக ஈடுபாட்டுடன் நடித்தீர்கள். இப்ப என்ன வந்தது? தேர்ந்தெடுத்து சில படங்களிலாவது நடிக்கலாமே?” என்றேன்.

ம்கூம், நடிக்க மாட்டேன்” என வேகமாக பதில் தந்தார்.

ஏன்? ஏதாவது கோபமா?” என்றேன்.

ஆமாம், சூழல் முற்றிலும் மாறியுள்ளது.தொழில்னுட்ப வளர்ச்சி அர்பணிப்பான கலை ஈடுபாட்டை அவசியமற்றதாக்கி விட்டது. ஒரு குறிப்பிட்ட சம்பவம் இனி அரிதாரம் பூசி நடிபதில்லை என என்னை முடிவெடுக்க வைத்துவிட்டது.
போதும்,மற்றவர்கள் எழுதி தந்ததை பேசி நடித்தது.இனி  நான் சுயம்புவாக மட்டுமே வெளிப்பட வேண்டும் என முடிவு எடுத்தேன்
என்னுடைய இடையறாத வாசிப்பு அனுபவமும், நீண்ட, நெடிய வாழ்க்கை அனுபவங்களும்
இப்போது
சொற்பொழிவாளராக என்னை அவதாரமெடுக்க வைத்துவிட்டது.
பெண்,மாகாபாரதம், கம்ப இராமாயணம்..என்ற வரிசையில் தற்போது திருக்குறளை சொல்லப் போகிறேன். ஒவ்வொரு குறளையும் உணர்த்த ஒரு சம்பவம்,அல்லது கதை..என்பதாக இரண்டு நிமிடத்தில்  சொல்லப் போகிறேன்.குறளை நினைவில் வைக்க முடியவில்லை என்றாலும், சொல்லப்பட்ட சம்பவங்களும் ,கதைகளும் குறள் சொல்லும் அறச்சிந்தனையை மனதில் பதிய வைத்துவிடும்.என்றார்.
அவசியமான முயற்சி தான்.வாழ்த்துகள்.” என விடை பெற்றேன்.

சுயம் உணர ஒரு அறச் சீற்றம் அவசியப்பட்டது.சுயம் உணர ஆரம்பித்த ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி, மற்றவர்களிடமும் தாக்கத்தை விதைகிறார்கள்தானே...!

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...