Sunday, July 15, 2018

Thirumavelan padikaramu

ஒரு விபத்து ஒரு பத்திரிக்கையாளரின் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. நான்கு பத்திரிக்கையாளர்களின் எதிர்காலத்தை துயரமானதாக ஆக்கி இருக்கிறது.
இந்த தகவலை வினோத்ராஜ் அனுப்பியபோது ஏற்பட்ட அதிர்ச்சி தமிழ் அதை விவரித்தபோது அதிகமானது.இறந்து போன பத்திரிக்கையாளர் ஷாலினிக்கு அன்று தான் பிறந்தநாள். இன்னொரு பத்திரிகை தோழியின் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்புகிறார்கள். இன்றைய தினம் அவர்கள் அனைவரும் வேறொரு நிறுவனத்தில் பணிக்கு சேர வேண்டும்.
காலம் இவர்களது கனவை நிறைவேற்றித்தரத் தயாரான நேரத்தில் விபரீத விபத்து நடந்துள்ளது. சதீஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிக்கையாளன் என்ற தொழிலே போராட்டமானது. தனக்கானது அல்ல. சமூகத்துக்கானது. ஷாலினியின் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல. சமூகத்துக்கானது.
இந்த நேரத்தில் சொல்வதற்கு இருப்பது ஒன்றுதான்..
செய்திக்காகவும் விருப்பத்தின் பொருட்டும் தம்பி/ தங்கைகள் அதிகமாய் பயணம் செல்கிறார்கள்.
அவசரப்பயணம்/ விரைவுப்பயணம்/ இரவுப்பயணம் எப்போதும் வேண்டாம்.
நம்மைவிட நாம் செல்லும் வாகனம் சரியாக இருக்கிறதா எனப்பாருங்கள்.
என்ன தான் திறமையாக வாகனம் ஓட்டத் தெரிந்தவராக இருந்தாலும் தூரப் பயணங்களுக்கு தனி ஓட்டுநர்களை வைத்துக் கொள்ளுங்கள்.
பயணங்கள் இனிமையானது மட்டுமல்ல துயரமானது.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...