Sunday, August 26, 2018

முத்துக்கிருஷ்ணன்

தமிழ் நிலத்தை அதன் மனிதர்களின் பாடுகளை எந்த மிகையுமில்லாமல் உள்ளது உள்ளபடியே காட்டிய திரைப்படம் மேற்கு தொடர்ச்சி மலை. நேற்று இரவும் படம் பார்த்து தூக்கத்தை தொலைத்தேன், இரவெல்லாம் மனம் அந்த மலைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது.

ஒளிராத இந்தியாவின் மனிதர்களின் வாழ்வு எப்படி எல்லாம் காவு வாங்கப்படுகிறது என்பதை, அதன் அரசியலை கச்சிதமாக எந்த பிரச்சார தொனியும் இல்லாமல் அனாயசமாக திரைமொழியாக மாற்றியிருக்கிறார், ஒரு பறவையின் இரு றெக்கைகளாக லெனின் பாரதியும் தேனி ஈஸ்வரும், இளையராஜா எனும் காற்றில் வலசை வருகிறார்கள்.

உலக திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிக் குவித்திருகிறது மேலும் அள்ளிக் குவிக்கும் இந்த  படம் என்பதில் சந்தைகமில்லை. ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை இந்த நிலம் மேற்கு தொடர்ச்சி மலையை கொண்டாட வேண்டும், தவறவிடாமல் இந்த பதிவை வாசிக்கும் ஒவ்வொருவரும் அவசியமாக அகலத் திறந்த கண்களுடன் கிளம்புங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகள் நோக்கி, உங்களுக்காக ஒரு பேரனுபவம் காத்திருக்கிறது

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...