ஐயா... கறுப்பு/கருப்புக்கு எந்த று/ரு வரும் என்று தெளிவுபடுத்தவும். சின்ன வயதில் சின்ன ரு என்று படித்தேன். இப்போது புத்தகங்களில் பெரிய று வருகிறது.
**
கறுப்பு என்பதற்கு நிறப்பெயராய் வல்லின று வரும்.
கருமை என்பதற்குப் பண்புப்பெயராய் கரும், கார், கரு என்று வரும். கரும்புலி, கார்மேகம், கருங்குழல், கருநிறம், கரியன் என்பவை பண்புத்தொகையாய் வருபவை.
நிறத்தைக் குறிக்கும் தனிச்சொல் ஒருபோதும் கருப்பு என்று வராது. கறுப்பு என்றுதான் வரும்.
சிவப்பு என்பது நிறப்பெயர். அது பண்புப் பெயராகையில் செஞ்சுடர், செம்புலம் என்று வருவதைப் போன்றது இது. சிவப்பு என்பது நிறப்பெயர். செம்மை என்பது பண்புப் பெயர்.
அவ்வாறே கறுப்பு என்பது நிறப்பெயர். கருமை என்பது பண்புப்பெயர்.
ஒருபோதும் கறுமை என்று வராது.
ஒருபோதும் கருப்பு என்று வராது.
இவ்விரண்டு சொற்களுக்குமிடையில் ஏறத்தாழ ஒரே பொருள் என்பதால் இக்குழப்பம் எல்லாரையும் படுத்துகிறது.
No comments:
Post a Comment