Saturday, September 15, 2018

கவிதாபாரதி

அவன்
தி.மு.க்.வும் கம்யூனிஸ்ட்களும்
நமது விரோதியென்பான்..

பெரியாரும் கருணாநிதியும்
தமிழகத்தைச் சீரழித்தார்கள் என்பான்..

ராமதாசும் திருமாவளவனும்
சாதிவெறியர்களென்பான்..

போராட்டம் வன்முறை
அறிவைப் பயன்படுத்துங்களென்பான்

வேலைநிறுத்தம் பொருளாதார இழப்பு
வேலை செய்து ஒருநாள் ஊதியத்தை
உருப்படியாய் செலவிடலாம் என்பான்

மாகாண சுயாட்சிக்கு
ஒப்புக் கொள்ளாதது பிரபாகரனின் முட்டாள்தனமென்பான்

இந்தி படிக்காததால்
தமிழ்நாடு அறுபதாண்டுகள்
பின்தங்கிவிட்டதென்பான்

ஜல்லிக்கட்டு மிருகவதையென்பான்

உணவுக்காக உயிர்க்கொலை செய்தல் பாவமென்பான்

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவத்தினரின்
தியாகம் போற்றுவான்

தமிழில் இதுவரை எழுதப்பட்டதெல்லாம்
வெற்றுக் கோஷமென்பான்

மகாபாரதமே காலத்தால் அழியாத
இலக்கியமென்பான்

ஜெயமோகன் மூன்றாவது கண்ணால்
உலகத்தைப் பார்க்கிறாரென்பான்

இந்தியா என்பதே அடையாளமென்பான்

பெரியாரை வந்தேறியென்பான்

நேற்றுப் பேசியதை மாற்றிப் பேசுவதில்
எந்தத் தயக்கமும் அவனுக்கில்லை

தன் வாயால் சிரித்தபடி
பிறர் வாயால் வசை பேசுவான்

இந்தக் குளிர்பதனம் செய்யப்பட்ட
குண்டிக்காரனுக்கு
நம் கைகளில்
கொள்ளிக்கட்டைகளைக் கொடுத்து
நமக்குள் நாம் கொளுத்திக்கொள்வதை பார்த்து ரசிப்பது
தேசிய விளையாட்டு..

நம்மில் ஜெயித்தவர்
தோற்கும்வரை
நம்மிலிருந்து புதிய எதிரிகளை
உருவாக்கிக்க்கொண்டே இருப்பான்
எல்லாம் அவனுடையதாகும் வரைக்கும்...

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...