Wednesday, September 12, 2018

அருணகிரி சங்கரன்கோவில்

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது? என்று கேட்டால் உங்களில் பலர் நோர்வே என்று சொல்லி விடுவீர்கள்.

சரி.

நண்பகலில் சூரியன் மறையும் நாடு எது?

புவியின் வட துருவத்திற்கு அருகில் உள்ள ட்ரொம்சோ விமான நிலையத்தில் காலை 11 மணிக்கு நான் போய் இறங்கியபோது பலத்த அதிர்ச்சி அடைந்தேன்.

இரவு 12 மணி போல இருண்டு கிடந்தது. என்னை வரவேற்க வந்து இருந்த நண்பர் சிம்மனிடம் கேட்டேன்.
ஆமாம் அண்ணா.
ஜூன் 21 ஆம் நாள் 24 மணி நேரமும் வெளிச்சம் இருக்கும். அடுத்த ஒவ்வொரு நாளும் படிப்படியாக மூன்று நிமிடங்கள் வெளிச்சம் குறையும். நவம்பர் 2 முதல் வடதுருவத்தில் சூரியன் தெரியாது. ஆனால் வெளிச்சம் இருக்கும். டிசம்பர் 20 முதல் பெப்ரவரி 10 வரை 24 மணி நேரமும் இருட்டுதான் என்றார்.

5 ஆம் வகுப்பில் நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு என்று மட்டும்தான் சொல்லிக் கொடுத்தார்கள். 24 மணி நேரமும் இருட்டு என்பது எங்கள் ஊர் பட புத்தகத்தில் இல்லை. நான் வரலாறு புவியியலில் 100 க்கு 105 மார்க் வாங்கியவன்.
(ஆசிரியர் போட்ட மதிப்பெண்களைக் கூட்டியபோது அப்படி வந்தது. பிறகு அதைத் திருத்தி 99 போட்டார்.)

எனக்கே இந்த உண்மை இங்கே வந்த பிறகுதான் தெரிகிறது என்றேன்.

அண்ணா எங்கள் நாட்டிலும் கூட (யாழ்பாணம்) அப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்கள் என்றார்

அடுத்த மூன்று நாள்களும் 24 மணி நேரமும் இருட்டுக்குள்தான் இருந்தேன். அதுகுறித்து ஆல்ப்ஸ் மலையில் அருணகிரி என்ற எனது பயண நூலில் விரிவாக எழுதி உள்ளேன்.

நண்பகலில் சூரியன் மறையும் நாடும் நோர்வேதான்
இதுதான் பயணம் தருகின்ற பாடம்.

படத்தில் நீங்கள் காண்பது 24 மணி நேர சூரியனின் காட்சி.
வட துருவத்தில் சூரியன் காலையில் கிழக்கே; பகல் 12 மணிக்கு வடக்கே; மாலை 6 மணிக்கு மேற்கே; இரவு 12 மணிக்கு தெற்கே நிற்கும். அதாவது வட்டமாகச் சுற்றி வரும்.

உங்களில் எத்தனை பேருக்கு இது முன்பே தெரியும். மறைக்காமல் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...