"தாகம்" இதழின் 25000 முகநூல் வாசகர்களுக்கு அன்பு வேண்டுகோள். கடந்தப் பல ஆண்டுகளாக நிலவும் கடும் பொருளாதாரச்சரிவின் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கிவிட்டன. பலத் தொழிலதிபர்கள் காணாமல்போய்விட்டனர். லாப நோக்கம் கொண்டத் தொழில்களே முடங்கும் போது, சமூக அக்கறை கொண்ட அச்சு ஊடகங்கள் நிலை என்னவென்று சொல்ல வார்த்தைகளே இல்லை.
பாரம்பரியம் மிக்க அச்சு இதழ்களே விற்பனையில் படுபாதாளத்தில் வீழ்ந்துக்கிடக்கின்றன. இணைய வழி (you tube , Facebook) காட்சி ஊடகங்களாக அவை மாறி வருகின்றன. பாரம்பரிய நிறுவனங்களின் நிலையே அதுவென்றால் , "தாகம் " போன்ற இதழ்களின் நிலை .....?
1992 ஆம் ஆண்டு அனைத்துக்கல்லூரி மாணவர் இதழாய் தொடங்கப்பட்ட "தாகம்" 28 ஆம் ஆண்டை நெருங்கி வருகிறது. மதவாத பாசிச சக்திகளுக்கு எதிராகவே உங்கள் "தாகம் " எப்போதும் நின்று இருக்கிறது.
மிகத்தீவிர உறுப்பினர் சேர்க்கையில் "தாகம் " களம் கண்டு வருகிறது. " தாகம் " இதழின் உயிர் மூச்சே அதன் உறுப்பினர்களான சந்தாதாரர்கள்தான்.
இன்றே உறுப்பினர் கட்டணம் செலுத்தி
" தாகம் " இதழுக்கு ஆதரவு தாருங்கள் தோழர்களே.
- தமிழன்புடன்
'தாகம் ' செங்குட்டுவன்
# உறுப்பினர் கட்டணம் மற்றும் வங்கிக்கணக்கு எண் விளம்பரத்தில் உள்ளது.
No comments:
Post a Comment