Monday, December 24, 2018

முடியட்டும் விடியட்டும் !

உனக்கு
குழந்தைகள்
இல்லை

குடும்ப அரசியலில்
நீ
சிக்கவேயில்லை !

ஆனால்
நீ உருவாக்கிய
கல்வித்தந்தைகள்

ஒரு குழந்தைக்கு
கல்வி தர
கோடி ரூபாய் கேட்கின்றனர் !

உன் காதலியை
எமக்கு
'அம்மா' ஆக்கினாய்

அனாதைகளாய்
தவிக்கின்றோம்
அவரைக் காணவில்லை !!

அள்ளி அள்ளி
நீ கொடுப்பாய்
என்பார்கள்

'5 கோடி' தவிர
நீ கொடுத்தது
எதற்க்கும் பயன்படவில்லை !

உன்னைப்பின்பற்றி
ஒன்றன் பின் ஒன்றாய்
வருகிறார்கள்

உன்னிடம்
விரைந்து அழைத்துக்கொள்
அவர்களை !

திரைத்தலைவர் சகாப்தம்
உன் 'அம்மு'வோடு
முடியட்டும்

தரைத்தலைவர் ஒருவரால்
தமிழர் வாழ்வு
விடியட்டும் !!

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ?" - தொகுப்பிலிருந்து)

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...