சாமியை தரிசிப்பது என்பது 10 நிமிட வேலை. ஆனால் மாதவிலக்கான பெண்கள் எல்லா வேலைகளையும் பார்க்கிறார்கள். டென்னிஸ் ஆடுகிறார்கள். ஆட்டோ ஓட்டுகிறார்கள். சமைக்கிறார்கள். செவிலியர் சேவை செய்கிறார்கள். இரவெல்லாம் கண்விழித்து பிபிஒவில் பேசுகிறார்கள். க்ராஸ் கண்டரி விமானத்தில் பணிப்பெண்ணாய் சிரிக்கிறார்கள். பெட்டிக் கடையில் நாள் முழுக்க கல்லாவில் அமர்ந்து இருக்கிறார்கள். வங்கி பணியில் மாற்றி மாற்றி சளைக்காமல் பதில் சொல்கிறார்கள். சாராய கடை வாசலில் சால்னாவோடு டபுள் ஆம்லெட் போடுகிறார்கள். சானிடரி நாப்கின் ஸ்டாக் இல்லையென்றால், ஆபிஸ் தோழியிடம் கடன் வாங்கி மாட்டிக் கொண்டு தங்களுடைய வேலையில் திரும்ப ஈடு படுகிறார்கள்.
அப்போதெல்லாம் வராத அக்கறை, சாமிக்கு வருகிறதென்றால், கோளாறு சாமியிடத்திலும், அதை மரபாக மாற்றி வைத்திருக்கும் தந்திரி & புராதன கோஷ்டிகளிடத்திலும் தான்.
சாமியை தரிசிக்கக் கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்கும் ஆண்கள், தங்களுடைய வாழ்வில் சுற்றி இருக்கும் பெண்களையும் (அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள்) மாதவிலக்கு காலத்தில் எந்த வேலையையும் செய்ய சொல்லாமல், அவர்களின் கால்களை தலையில் தாங்குபவர்களாக இருந்தால், நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் கேட்க தயாராக இருக்கிறேன்.
Let them decide what to do, what not to do during their periods. Let's not make our own MCP gods!
No comments:
Post a Comment