வரலாறு படைத்த குரோஷியா
உலகக் கோப்பை உதைபந்தாட்டத்தின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது.
இந்திய நேரப்படி இரவு 11.30
மலேசிய நேரப்படி இரவு 2 மணிக்கு
இரண்டாவது அரை இறுதிப் போட்டி தொடங்கியது.
நான் தொலைக்காட்சியை இயக்கிப் பார்க்கத் தொடங்கியபொழுது,
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களுக்கு உள்ளேயே இங்கிலாந்து ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்று இருந்தது.
இடைவேளை வரை வேறு கோல் எதுவும் இல்லை.
ஆனால், நான் பார்த்த அளவில் குரோஷியா ஆட்டத்தில் துடிப்பு தெரிந்தது.
68 ஆவது நிமிடத்தில், தனது காலை தோள் அளவுக்கு உயர்த்தி குரோஷியா வீரர் உதைத்த பந்து வலைக்குள் புகுந்தது.
அடுத்த மூன்றாவது நிமிடத்தில் மற்றொரு தாக்குதலில் பந்து,
இங்கிலாந்து கோல் கம்பத்தின் மீது பட்டு விலகியது. மயிர் இழையில் தப்பியது இங்கிலாந்து.
அப்போதே, இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு இனி வாய்ப்பு இருக்காது என்று கருதினேன்.
90 நிமிடங்கள் முடிந்தன. கூடுதல் நேரத்தின் முதல் பகுதியும் முடிந்தது.
இரண்டாவது போட்டியில் குரோஷிய வீரர் இடது காலால் பந்தை அபாரமாகத் திருப்பி வலைக்குள் புகுத்தி விட்டார்.
குரோஷியா வென்றது.
1966 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற இங்கிலாந்து,
இம்முறை வெல்லக்கூடிய வாய்ப்பை மயிர் இழையில் தப்ப விட்டது.
கிரிக்கெட் ஆட்டத்தைத் தோற்றுவித்த அவர்கள்,
சில முறை இறுதிப் போட்டியில் ஆடியபோதிலும்,
இதுவரை கிரிக்கெட் உலகக் கோப்பையை
ஒருமுறை கூட வெல்ல முடியவில்லை.
கால்பந்திலும் அவர்களது சோகம் தொடர்கின்றது.
குரோஷியாவைப் பொறுத்த அளவில்
அது முன்னாள் யூகோஸ்லாவியக் குடியரசில் இருந்து பிரிந்த ஒரு நாடு. 58000 சதுர கிலோமீட்டர்கள் நிலப்பரப்பில் நீண்ட கடற்கரையைக் கொண்டது.
(தமிழகம் 1,30,000 சதுர கிலோமீட்டர்கள் நிலப்பரப்பு)
# Arunagiri sankarankovil
No comments:
Post a Comment