இன்னும் ஒரே ஆண்டில் தேர்தலை சந்திக்க இருக்கும் மோடிக்கு ராகுல் காந்தி ஒருப் போட்டியே இல்லை. எதிர்கட்சிகள் ராகுல் தலைமையில் ஒன்றிணையப்போகின்றனவா ? மம்தா தலைமையில் ஒன்றிணையப்போகின்றனவா ? என்பதிலேயே பெரும் குழப்பம் நிலவுகிறது.
பெரும்பாலான ஊடகங்கள் மோடியின் கைப்பாவையாக மாறிவிட்ட நிலையில், அவரை எதிர்க்கும் ஒரே ஒரு எதிர்கட்சி , சமூக ஊடகங்கள்தான். சமூக ஊடகங்களை ஒடுக்காதப்பட்டசத்தில் மோடி மீண்டும் பிரதமராவது கடினம்.
முதலில் வாட்சேப் பூனைக்கு மணி கட்டியுள்ளது மோடி அரசு. இனி இந்தியாவில் யாரும் ஒரு செய்தியை 5 பேருக்கு மேல் அனுப்ப இயலாது. கிட்டத்தட்ட 1600 கணக்குகளை மோடி அரசின் பரிந்துரையின் பெயரில் , முகநூல் நிறுவனம் முடக்கியுள்ளது.
ஆக ....மோடி ஜனநாயகத்தின் குரலை நேரடியாக நெறிக்கத் தொடங்கிவிட்டார். பி.எஸ்.என்.எல் போன்றப் பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கும் வேலை ஒரு புறம் வேகமாக நடைபெறுகிறது. மோடியின் அரசியல் பங்குதாரரான அம்பானியின் ஜியோ குடையின் கீழ் இந்தியாவை ஒருங்கிணைக்கும் வேலைகள் இன்னொரு புறம்.
தனி விமானத்தில் இந்தியாவெங்கும் பறந்துப் பறந்துப் பிரச்சாரம் செய்யவிருக்கும் ஏழைத்தாயின் மகனான மோடி , ஜனநாயகத்தின் ராஜபாட்டையான சமூக வலைத்தளங்களை ஒடுக்கும் வேலையைத் தொடங்கிவிட்டார்.
- கரிகாலன்
No comments:
Post a Comment