Wednesday, July 25, 2018

நடராஜன் சுந்தரபுத்தன்

விளையும் பயிர்

விளம்பரப் பட இயக்குநர் (ஜேடி) ஜெர்ரி அவர்களின் மகன் பிரியதர்சன் ஜோ ஜெர்ரி. லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தவர்.

ஒரு விளம்பரப் படத்தை தயாரித்து, இயக்கி, இசையும் கோர்த்து ஜாஸ் விளம்பரப்படப் போட்டியில் முதல் பரிசு வென்றிருக்கிறார். தம் மகனை சான்றோன் எனக் கேட்ட தந்தையாக உளம் மகிழ்ந்திருக்கிறார் இயக்குநர் ஜெர்ரி.

ஜாஸ் பர்ப்யூம்ஸ் பிராண்ட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் விளம்பரப்படப் போட்டி. இன்டர்வியூ என்ற தலைப்பில் பங்கேற்ற 300 படங்களில் ஜோ ஜெர்ரியின் விளம்பரப் படம்  முதலிடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.

“நாங்கள் பங்கேற்ற முதல் போட்டி. நான் இயக்கிய முதல் விளம்பரம். எங்கள் குழுவுக்கு ஓர் அற்புதமான அனுபவம்” என்கிறார், ஃபேஸ்புக் பக்கத்தில் சக நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஜோ ஜெர்ரி.

சாய் முனிஸ், சுசீந்திரன், அட்ரியன் டேவிட், ராஜிவ் ஆனந்த், மணீக் சுப்ரமணியன் மற்றும் விதூர் ராஜராஜன் – இவர்கள்தான் படக்குழு நண்பர்கள்.    

இதுவொரு முதல் முயற்சி. முதல் வெற்றி. இனி சாதிக்கப்போகும் உயரங்களுக்கு அது உரமாக இருக்கட்டும். விளையும் பயிராக வளர்ந்துவரும் தம்பி ஜோ ஜெர்ரி உள்ளிட்ட இளமைப் பட்டாளத்துக்கு வாழ்த்துகள்.

இணைப்பு: www.youtube.com/watch?v=b-huZ7e_q8U&feature=youtu.be

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...