Thursday, July 19, 2018

சுகிர்தா ராணி

தயவுசெய்து தற்கொலை செய்துகொள்

நாங்கள்
சமையலராக இருக்கிறோம்

நாங்கள் சமைத்த உணவு உனக்கு வேண்டாமெனில்...

நாங்கள்
மருத்துவராக இருக்கிறோம்
உனக்கு நீயே வைத்தியம் செய்துகொள்

செவிலியராக இருக்கிறோம்
உன் பிரசவத்தை
நீயே பார்த்துக் கொள்

பிணத்தை எரிப்பவராக இருக்கிறோம்
உன் பிணத்தை
நீயே எரித்துக் கொள்

பொறியாளராக இருக்கிறோம்
உன் கட்டடத்தை நீயே கட்டிக் கொள்.

வழக்கறிஞராக இருக்கிறோம்
உனக்கு நீயே வாதாடிக் கொள்

முடி வெட்டுபவராக இருக்கிறோம்
உன் மயிரை
நீயே வெட்டிக் கொள்

ஆசிரியராக இருக்கிறோம்
உன் பிள்ளைகளுக்கு
நீயே சொல்லிக்கொடு

ஓட்டுநராக இருக்கிறோம்
உன் போக்குவரத்தை
நீயே பார்த்துக் கொள்

கூலிகளாய் இருக்கிறோம்
உன் சுமைகளை நீயே தூக்கிக் கொள்

மலம் அள்ளுபவராக இருக்கிறோம்
உன் மலத்தை நீயே அள்ளிக் கொள்

சாக்கடை  வாருபவராக இருக்கிறோம்
உன் சாக்கடையை நீயே வாரிக் கொள்

கலப்புமணம் புரிந்தவராக
இருக்கிறோம்
உன்னையே நீ புணர்ந்துகொள்

நாங்கள்
அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவராக இருக்கிறோம்

இதுவும் உனக்கு
வேண்டாமெனில்

தயவுசெய்து தற்கொலை செய்துகொள்.

1 comment:

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...