Thursday, July 19, 2018

சந்தியா சாகேஷ்

டிஐிட்டல் இந்தியாவும் பள்ளி செல்லாக் குழந்தையும்
பீரித்திகா கூலி கடலோடியின் மகள் 12 வகுப்பில் 1098 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே இந்த கல்வியாண்டில் முதல் மாணவியாக வெற்றிபெற்றவள்.  சூப்பர் மார்க்கெட்டில் 5500 ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்துவிட்டாள். மேற்படிப்பு படிக்கவில்லையா? வசதியில்லை என்றாள். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மீனவமக்களின் கல்வி நிலையை ஆய்வு செய்தால் பள்ளி செல்ல குழந்தைக் ஏராளம் உள்ள உண்மை வெளிவரும். ஆறாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு கடலுக்கு செல்லும் நிலை ஏராளம் உள்ளது. குழந்தைகளை படிக்க வைக்கவேண்டும் என்ற கலாச்சாரம் குறைந்து கொண்டே வருகிறது. பெண்குழந்தைகள் நண்டு நிறுவனத்தில் அதிகம் பேர் சுமங்கலி திட்டத்தில் பணியாற்றுகிறார்கள். புன்னைகாயல், பெரியதாழை, மணப்பாடு போன்ற ஊர்களில் இது அதிகம் காணப்படுகிறது. சரவணஸ்டோரில் கொத்தடிமையாக வேலைசெய்யும் பெண்கள் ஏராளம். கல்லூரி படித்த பெண்கள் பலர் நண்டு நிறுவனத்தில் நாள் முழுவதும் வேலை செய்து இரத்தசோகையோடு அவதிப்படுவது என்ற கடலோடியின் கண்ணீர் கதைகள் ஏராளம். கடல்தொழில் கார்பரேட் கையில் உள்ளது வேறுதொழில் தரியாத மீனவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்வதும் நடைபெறுகிறது. விவிசாயிகள் தற்கொலைபோல் மீனவர்கள் தற்கொலைக்கும் பொருளாதார நெருக்கடியே காரணம்.  கண்டும் காணாத மத அமைப்புகள், தங்கள் நலன், பதவி என்று மக்களை பகுப்பாய்வு செய்து பணியாற்றாத அருட்பணியாளர்கள். சண்டையை சமாளிப்பதில் மட்டுமே அக்கறை கொண்ட ஊர்கமிட்டியார்,  சம்பளத்தை மட்டும் எதிர்பார்த்து பணியாற்றும் ஆசிரியர்கள் என்று ஏரளாமானச் சிக்கல்கள் உள்ளன.    மீனவர்களின் வாழ்வியலையும், பண்பாட்டு தளத்தில் பணியாற்ற வேண்டியதன் தேவையும் நாம்  புரிந்துகோள்ள வேண்டியுள்ளது.  டிஐிட்டல் இந்தியாவில் பள்ளி செல்லா குழந்தைகள் எங்களில்  பலர் உள்ளனர். வியப்பு என்னவென்றால் எங்களிடம் பள்ளிகள் உள்ளன. இந்தியாவுக்கே கல்வியை கொடுத்த கிறித்தவம் உள்ளது. நாங்கள் மட்டும் பள்ளிக்கு வெளியே உள்ளோம்..... அனல் மின்நிலையம் வந்தது, அணுஉலை வந்தது, சாகாமாலா வருகிறது, எல்லா வளர்ச்சி திட்டங்களும் எங்களை நோக்கியே  வருகிறது நாங்கள் எந்தவிதத்திலும் வளரவே இல்லே. வீண் பெருமைகள் வேண்டும் ஆக்கபூர்வமான திட்டங்களும் பணிகளும் செய்வோம்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...