ஓ பி. எஸ்சிற்கு அவரது டெல்லி முதலாளிகள் அநேகமாக சீட்டுக் கிழித்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.கவிற்கு சாதகமாக கட்டப்பஞ்சாயத்து பண்ண மோடி கூப்பிட்டு கூப்பிட்டு கொம்புசீவிய ஒ.பி.எஸ்ஸிற்கு இப்போது நிர்மலா சீத்தாராமன் அப்பாயிண்ட்மெண்ட்கூட கிடைக்கவில்லை. அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்காவிட்டால்கூட பரவாயில்லை அதற்கு பதில் அதிமுகவில் பா.ஜ.கவின் அதிகாரபூர்வ ஏஜெண்ட் மைத்ரேயனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருப்பதாக நிர்மலா ட்வீட் செய்திருப்பதுதான் ஓ பி. எஸ் சிற்கான ஹை லைட் மூக்கறுப்பு. டிடிவியையும் எடப்பாடியையும் ஒன்று சேர்த்து தனது நிழல் ஆட்சியை தமிழகத்தில் தொடர முடிவு செய்துவிட்டார் அமித் ஷா. ஓ.பி.எஸ் ஏதாவது துள்ளினால் சேகர் ரெட்டி விவகாரம், தேர்தல் பிரமாணத்தில் தவறான சொத்து மதிப்புக் காட்டிய விவகாரங்கள் உக்கிரமடையும். டிடிவி வந்துவிட்டால் முக்குலத்தோர் வாக்கு வங்கியையும் பாதுகாத்துக்கொள்ளலாம். ஓ.பி.எஸ்ஸை தள்ளிவிடுவதால் எந்த இழப்பும் இல்லை.
துரோகம், அடிமைத்தனம் இரண்டினாலும் கிடைக்கும் அதிகாரம் வந்த வழியே போய்விடும்.
No comments:
Post a Comment