Thursday, July 19, 2018

தாகம் செங்குட்டுவன்

சென்னை பப்ளிக் ஸ்கூல்.  சென்னை அண்ணா நகர் ரவுண்டானா அருகில் இப்பள்ளி இயங்குகிறது.  இப்பள்ளியின் எதிரில் உள்ள வசந்தா பவன் உணவகத்தில் ஒரு நிகழ்ச்சி.  பள்ளியின் வாசலில் நான் இன்று காலை 11. 45 மணி அளவில் நடந்து சென்றேன்.  அதி வேகமாகப் பள்ளிக்குள் நுழைந்த ஒரு கார் என்னை இடித்து நின்றது.  நான் சுதாரிக்கவில்லை எனில் தூக்கி வீசப்பட்டிருப்பேன். ஒரு நொடி என்ன நிகழ்ந்தது என்றே எனக்குப் புரியவில்லை.  காரில் வழக்கறிஞர் ஸ்டிக்கர்.  எனக்கும் ஓட்டுநருக்கும் கடும் வாக்குவாதம்.  நான் காரை புகைப்படம் எடுப்பதற்குள் அது மின்னல் வேகத்தில் பள்ளிக்குள் நுழைந்துவிட்டது.

எதிரில் உள்ள வசந்தா பவன் உணவகத்தில் நடந்த  நிகழ்ச்சியில் தலைக் காட்டிவிட்டு , அவசர வழக்குக்காக சென்னை உயர்நீதிமன்றம் விரைந்தேன்.  பள்ளி வாயிலில் என்ன நிகழ்ந்தது என்றே எனக்குப் புரியவில்லை.  வலது கையில் தொடங்கிய வலி  மெல்ல மெல்ல அதிகரித்தது. வழக்கறிஞர் அஜிதாவை சந்தித்துவிட்டு திரும்புகையில் வலி மேலும் அதிகரித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பல வழக்கறிஞர்கள் என் கல்லூரித் தோழர்கள்.

என் முக வாட்டத்தைப் பார்த்த என் வழக்கறிஞர் நண்பன் , " என்னவென்று விணவ " நடந்ததைச்சொன்னேன். உடனடியாக காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு என்னை புகார் அளிக்கச் சொன்னான். அவ்வாறே செய்தேன்.

சம்மந்தப்பட்டப்பள்ளி அண்ணா நகர் k 4 காவல் நிலைய வரையறைக்குள் உள்ளதால் எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றினை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் காவலர் ஜெயராஜூவிடம் அளித்தேன்.

பள்ளியின் பெயரைக்கேட்டவுடன் சற்று யோசித்த காவலர் ஜெயராஜூ, " புகார் எல்லாம் வேண்டாம்.  நாளை வாருங்கள்.  பேசுவோம். நீங்கள் கார் எண்ணைத் தெரியாது என்கிறீர்களே " என்றார்.

" என்னை இடித்து விட்டு செல்லும் ஒரு வாகனத்தின் எண்ணை நான் குறித்துக்கொள்ள வேண்டும்தான். அந்த வாகனம் மின்னல் வேகத்தில் தப்பிககும் பட்சத்தில் என்னால் எண்ணைப் பார்க்க இயலாது.  உங்களால் என் எழுத்து பூர்வமான புகாரை பெற முடியுமா முடியாதா ? என்றுக் கேட்க , மேலதிகாரியுடன் பேசிய ஜெயராஜூ, கடைசியில் புகாரைப் பெற்றுக்கொண்டார். சி.எஸ்.ஆர் எண் கேட்டேன்.  நாளை தருவதாக உறுதி அளித்துள்ளார்.

சம்மந்தப்பட்டப் பள்ளியின் வாயிலில் உள்ளக் காவலரிடம் புலனாய்வுச் செய்ததில், " சார் ....அநியாயம் பண்றானுங்க சார்.  கடும் போக்குவரத்து நெரிசலில் உள்ளப்பகுதி இது.  பள்ளிக்குள் அதி வேகமாகப் பெற்றோர்கள் காரில் நுழைகிறார்கள்.  நடந்து செல்லும் பொது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.  இன்று உங்களுக்கு நேர்ந்த சம்பவத்தை நேரில் பார்த்தேன்.  நான் என்ன சார் செய்ய முடியும்? இப்பள்ளியில் படிப்பவர்கள் பெரிய வீட்டுப்பிள்ளைகள்.தினம்தோறும் இத்தகைய விபத்துகள் நடைபெறுகின்றன. நீங்களாவது பூனைக்கு மணி கட்டுங்கள்  " என்றார்.

பள்ளி வாயிலில் உள்ள கேமராவில் இன்று என் மீது லேசாக மோதிய காரின் அனைத்துத் தகவலும் இருக்கும். 

நாளை விசாரணையின் போது அந்தக்கட்சி இருக்குமா? எடிட் செய்யப்பட்டு இருக்குமா? என்பதே என் சந்தேகம்.

லட்சக்கணக்கில் கட்டணம் வாங்கும் இதுபோன்றப் பள்ளிகளின் வாயிலில், அந்தப்பள்ளியின் காவலர்கள் பொது மக்கள் பாதிக்காத வண்ணம் போக்குவரத்தைச் சீர் செய்வது வழக்கம். Chennai public school நிர்வாகம் மட்டும் ஏன் இத்தனை அலட்சியமாக உள்ளது ? அது முன்னாள் தி.மு.க அமைச்சர் தம்பி நடத்தும் பள்ளி என்பதாலா  ? இப்பள்ளியின் முக்கியப் பாதுகாப்புக்கு அதிகாரிகள் ஓய்வுப் பெற்றக்காவலர்கள் என்பது , பத்திரிகையாளர் நண்பர் சொன்னக் கூடுதல் தகவல்.

நாளை என்ன நடக்கிறது....என்றுப்பார்ப்போம்...

- தாகம் செங்குட்டுவன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...