உடலற்ற என் சாமாதியில் நீ எழுதும் கவிக்கு என் பிணமென்று பெயர்.
கண்ணுற்ற போது பாய்ந்து மறைந்தது உன் வாசனை
பேரழகியென உனை நான் கற்பனை செய்தேன்
பிழம்பென உன் முத்தம் கருக்கொண்டபோது தயங்கினேன்
சொற்களற்ற உனது கனவில் திருட்டுத் தனமாய் எனது பெயரை நுழைத்தேன்
உனதன்பின் கருணை எனக்குள் கருப்பையானது
பெறப்போகும் உன் சிசுவுக்கு
இப்போது பெயர் வைக்கிறேன்
அறியமாட்டாய்
உனைத்தழுவ எனக்கு முலைகள் இல்லை
பாலூட்டவென எனக்கு எதுவும் இல்லை
விரல்கள் எங்கும் உனது பெயரை வரைந்து பார்க்கிறேன்
நீயற்ற என் கனவு கல்லறையில் பச்சை இலைகளை வரைகிறது
அன்பே
உன் சிசுவை
இன்று நான் ஈன்றெடுப்பேன்
உண்மையில் அது நீ என் கனவில் வைக்கும்
கால் பெருவிரலென அறிவேன்.
(கவிதை வாயிலாக கடந்த காலத்தை அசை போடுதல் ;)
https://saavinudhadugal.blogspot.com/2012/01/blog-post_24.html)
No comments:
Post a Comment