சிறுமி மீதான பாலியல் வன்முறையை முன்வைத்து,
வழக்கம்போல், கோபம் கொள்ளும், 'உச்'கொட்டும் நிறைய பெண்ணியப்பதிவுகளைப் பார்க்கமுடிகிறது.
உண்மையில், இந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும், இல்லாமல் ஆக்கும் செயல்பாடுகளை இந்திய அளவில் பெண்ணியவாதிகள் செய்திருக்கமுடியும்.
ஆனால், அரைகுறைப் பெண்ணியம் அல்லது பெண்ணியமல்லாத பெண்ணியம் தொடர்ந்து கொண்டே இருப்பது தான் காரணம்.
இதற்கு ஆண்களை மட்டுமே காரணம் காட்டிக் கோபம் கொள்வதை நான் அபத்தம் என்றே சொல்வேன்.
இந்தியாவின் சாதியப் புரிதல் நிலை, அதில் ஆண்களுக்கு இருக்கும் பாலியல் அதிகார வாய்ப்புகள், பெண்களைப் பிரித்துவைக்கும் சாதியின் நுண்சுவர்கள் இவற்றையெல்லாம் புரிந்து கடந்து செல்லும், கையாளும் வலிமையைப் பெறாமல், இந்தப் பாலியல் வன்முறைகளை நாம் தடுக்கவே முடியாது.
இப்பொழுது பாருங்கள், மரணதண்டனை தான் தீர்வு என்று அதிகாரச் சிந்தனைப் பெண்கள் கூட்டமாய் வருவார்கள். அரைகுறைப்பெண்ணியவாதிகள் ஆவேசப்பட்டுவிட்டு அடுத்த ஸ்டேடசுக்கு நகர்வார்கள்.
முழு நீளச்செயல்பாடுகள், பெண்களின் ப்ரெஷர் குரூப்கள் சாத்தியப்பட்டதே இல்லை. இப்படி கோபப்பட்டுவிட்டு நகர்வது ஒரு மேம்போக்கான, சொகுசான, ஸ்டைலான தனிமனித நிலை. தொடர்வோம்!
Tuesday, July 17, 2018
குட்டி ரேவதி
Subscribe to:
Post Comments (Atom)
கார்டூனிஸ்ட் பாலா
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...

-
தம்பி பிறந்து நான்கைந்து மாதங்களில், சிவகங்கை அரண்மனைக்கு எதிரான அரங்கில் கலைஞர் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார், அப்பாவும், அம்மாவும் ...
-
தயவுசெய்து தற்கொலை செய்துகொள் நாங்கள் சமையலராக இருக்கிறோம் நாங்கள் சமைத்த உணவு உனக்கு வேண்டாமெனில்... நாங்கள் மருத்துவராக இருக்கிறோம் ...
-
படத்தைப் பாருங்கள். மோடி அரசால் வல்லபபாய் பட்டேலுக்கு வைக்கப்படுகிற மிகப்பெரிய சிலைக்கான பெயரான Statute of Unity என்பதை பல மொழிகளில் குறிப்...
No comments:
Post a Comment