Thursday, July 26, 2018

நலங்கிள்ளி

பிரியாணிச் சுவையில் கரைந்த பெண்ணுரிமை!

சென்னை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என் பல் ஊடுகதிர்ப் படம் எடுக்க பணம் கட்டுவதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்தேன். ஒரு பெண், அவருக்கு 25 வயதிருக்கும். மேட்டுக்குடியாக விரும்பும் எளிய பெண்கள் போன்றே நெற்றி நடு வகிட்டில் குங்குமம் வைத்திருந்தார். திருமணமானவர். ஒவ்வொருவரும் அவரவர்களின் பல் வலிக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணைப் ஒரு பாட்டி கேட்டார். என்னம்மா, கன்னம் இப்படி வீங்கிருக்கு என்றார். நேத்து என் வீட்டுககாரர் அடிச்சிட்டாரு, கீழ் வரிசைல ரெண்டு பல்லு ஒடைஞ்சிடுச்சி என்றார். ஏன் அடிச்சாரு எனக் கேட்டேன் நான். கொழம்பு அவருக்குப் புடிச்சா மாதிரி சரியா வைக்கலைன்னு கோவிச்சுகிட்டு அடிச்சிட்டாரு என்றார். எனக்கு உடனே பெண்ணியச் சீற்றம் . ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்களிடம் கலாட்டா சிரிப்பு .   ஏம்மா கொழம்பு ருசியா வைக்கலைன்னா அடி வாங்கினன்னு கட்டணம் வசூலிப்பவர் பகடியாகச் சிரித்தார். இப்போது அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். பாவம் வருந்துவார் என நினைத்தேன். பார்த்தால் அவரும் மற்றவர்களுடன் சேர்ந்து சிரிக்கிறார். என்னம்மா சிரிக்கற, இது சட்டப் படிக் குற்றம்னு தெரியுமான்னேன்? இதற்கெல்லாமா சட்டம் இருக்குன்னு கேலியாகச் சிரித்தாள். சார் நீங்க வேற, அவரு அடிச்சாருன்னா அன்னைக்கே ஒரு பிரியாணி கேட்டு அடம் பிடிச்சு வாங்கிடுவேன் என்றாள் குழந்தையைப் போல! ஏம்மா ? ஒரு பிரியாணிக்காகப் பெண்ணுரிமைய வித்துப்புட்டியே என்றேன். பெண்ணுரிமைன்னா என்ன சார் என்றாள். இப்போது நான் கப்சிப்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...