எதிரி என நினைத்திருந்தோரும்
இல்லம் தேடி வருகிறார்..
வாஞ்சையோடு அரவணைக்கிறது
உன் உள்ளம்.
நீண்ட நாட்களாக
வாசலில் காத்திருக்கும் காலனை
அத்தனை சீக்கிரமாக
அரவணைத்துவிடாதே..
எத்தனை உடன்பிறப்புகள்
உன் உயிராகத் துடிக்கின்றார்
ஒரு முறை உற்று நோக்கு…
ஒற்றைச் சொல்லால்
அவர் துயரம் போக்கு..
கட்சித் தலைவராக பொன்விழா
சட்டமன்ற உறுப்பினராக வைரவிழா
பத்திரிகையாளராக பவளவிழா
உன் இலட்சியப் பயணம்
ஒருபோதும் தடுக்கி விழா (து)….
பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும்
உன் சாதனை வரலாறு
நீ வாழ்கின்ற நாட்களெல்லாம்
எமக்கு பெரும்பேறு
திருவள்ளுவர் ஆண்டு 2049 ஆடி 11
No comments:
Post a Comment