பசுமை வழிச்சாலையை மிஞ்சும்
இணைய வழிச்சாலை !
மிதக்கும் சென்னையை
அமுக்கும் கார்ப்பரேட் மாஃபியா !!
--------------------------------------------------------------
பத்து நிமிட மழைக்கே மிதந்து கொண்டிருக்கிறது சென்னை. ஏற்கனவே குண்டும் குழியுமாக திகழும் சாலையெங்கும் மழை நீரும் கழிவு நீரும் சங்கமிக்க, போக்குவரத்து நெரிசலில் சிக்கித்திணறி வருகின்றனர் மக்கள். வழக்கமாக மழைக்காலங்களில் தூர் வாருவதுபோல் கணக்குக்காட்டும் மாநகராட்சி, இம்முறை நகரெங்கும் உள்ள சாலைகளை தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு விற்றேவிட்டது.
மக்கள் வரிப்பணத்தில் போடப்பட்ட சாலைகள் எங்கும் 10 அடி அகலத்துக்கும் ஆழத்துக்கும் சாலைகள் உடைக்கப்படுகின்றன. மின் இணைப்புகள், குடி நீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பாதாள சாக்கடையை அரசு சீரமைக்கிறதோ என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் ஒரு அடி முட்டாள்.
முதலில் விசாரித்தபோது , "பி.எஸ்.என்.எல் இணைய சேவைக்கு கேபிள் பதிக்கிறோம் " என்றார்கள். இரவுதோறும் வரும் ராட்சத வாகனங்களை பார்த்து சந்தேகம் எழ , " ஏர்டெல் நிறுவன கேபிள் பணி " என்று பதில் வருகிறது. அதுவும் உண்மையாக இருக்காது. அம்பானியின் ஜியோ நிறுவன கேபிள் பணியாக இருக்கலாம்.
தனியார் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக தமிழகம் விற்றாகிவிட்டது.
- தாகம் இதழுக்காக ....கரிகாலன்
No comments:
Post a Comment