Monday, July 23, 2018

"பூவுலகின் நண்பர்கள்" சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள் ஆரம்பம் தொட்டே "பேசப்படாத பொருள்" குறித்து பேசும், விவாதிக்கும் அமைப்புதான். 80களின் இறுதியில் "சூழல்" குறித்த எந்த புரிதலும், விவாதங்களும் பெரிதாக இல்லாத காலகட்டங்களில் "சுற்றுச்சூழலை" கருபொருளாக கொண்டு தொடங்கப்பட்ட அமைப்பு. கூடங்குளம் அணு உலைகளுக்காக 1988 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது, ஆனால் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அணு சக்தியின் தீமைகள் குறித்து பொதுவாகவும், கூடங்குளம் குறித்து குறிப்பாகவும் வெளியீடுகளை கொண்டுவந்தது.

தோற்றுவித்த நெடுஞ்செழியன் மறைவிற்கு பின்னர் இப்போது இயங்கக்கூடியவர்களும் அதே அலைவரிசையில் தான் செயல்படுகிறார்கள். கால சூழ்நிலைக்கேற்ப சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளதே தவிர அடிப்படை செயல்பாடுகளைப் பொறுத்த வரையில் அதே வழியில் தான் அமைப்பு பயணிக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை- சேலம் இடையே அறிவிக்கப்பட்டுள்ள புதிய எட்டு வழிச்சாலை குறித்து மக்கள் தங்கள் எதிர்ப்பை பெரிய அளவில் போராட்டம் மூலம் காண்பித்துவருகிறார்கள், ஆனால் பொது வெளியில் அது பெரிதாக விவாதப்பொருளாக மாறவில்லை. இதை கருத்தில் கொண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னையில் முதன் முறையாக இது குறித்து கூட்டம் ஒன்றை ஒருங்கிணைத்தது. நேற்று மாலை சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பேரா. ஜனகராஜன், பேரா. சுப்ரமணியன், வழ. வெற்றிச்செல்வன் கலந்துகொண்டு வெவ்வேறு பார்வைகளில் கருத்துக்களை எடுத்துவைத்தனர். நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் விவசாயிகளும் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களை சேர்ந்த செயல்பாட்டாளர்கள் மற்றும் நிறைய இளைஞர்கள் கலந்துகொண்டார்கள். அதிகளவில் இளைஞர்கள் கலந்துகொண்டது நிறைய நம்பிக்கை அளிக்கிறது.

பேசாத பொருள்குறித்து இன்னும் அதிகம் பேசுவோம், கேட்கப்படாதோரின் குரலாக ஒலிப்போம்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...