Thursday, July 19, 2018

எல்.ஆர்.ஜெகதீசன்

நீட் தேர்வு விவகாரத்தில் 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இன்று இந்திய நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக அரசு நியமித்த மொழி பெயர்ப்பாளர்கள் தான் நீட் வினாத்தாளை மொழி பெயர்த்ததாகவும் எனவே இதில் சிபிஎஸ்இன் தவறு எதுவும் இல்லை என்றும் கூறி இருக்கிறார்.

இது எவ்வளவு பெரிய செய்தி? ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்க மத்திய அரசு ஒருபக்கம் நீட் என்கிற அநியாயத்தை திணிக்கிறது என்றால் அந்த நீட்டின் கேள்வித்தாளை மொழிபெயர்க்கும் வேலைக்கு பணியாளர்களை நியமித்த தமிழக அரசு சரியான ஆட்களை நியமிக்கவில்ல என மத்திய அமைச்சர் இந்திய நாடாளுமன்றத்திலேயே சொல்கிறார்.

பலநூறு தமிழக மாணவர்களின் மருத்துவபடிப்பு என்னும் கனவை நேரடியாக பாதிக்கும் ஒருவிஷயத்துக்கு தமிழக அரசே பொறுப்பு என மத்திய அரசே சொன்னபின்னும் மாநில அரசில் இதற்கு பதில் வந்ததா? தமிழக அரசில் இதற்கு யார் பொறுப்பு? என்னதான் நடந்தது என்கிற கேள்விகள் எழுப்பப்பட்டு உண்மைகளை கண்டுபிடிக்க தமிழ்நாட்டு ஊடகங்கள் முயன்றனவா? ஒருவேளை நான் தான் அதுகுறித்த செய்திகளை தவறவிட்டேனா?

ஒருநாளும் இல்லாத திருநாளாக மேட்டூர் அணை நீர்திறப்பு என்கிற சாக்கில் வருமானவரி சோதனைக்குள்ளான தன் சம்பந்தியை நேரில் சந்திக்க சொந்த ஊருக்குப்போன தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து தன் ஆட்சியில் முட்டை ஊழல் நடக்கவே இல்லை என்று நீண்ட நெடிய பேட்டியெல்லாம் கொடுத்து விளக்கியிருக்கிறார். அவரிடம் இந்த பிரச்சனைகுறித்து தமிழக ஊடகவியலாளர்கள் யாரேனும் கேள்வி எழுப்பினார்களா? ஒருவேளை நான் தான் அதுகுறித்த செய்திகளை தவறவிட்டேனா?

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...