கவிஞர் முத்துகுமார்,
நல்லா இருக்கீங்களா? இன்னிக்கு உங்களுக்கு 43ஆவது பிறந்தநாள். இந்த பூமியில் வாழ்ந்திருந்தால் இன்று உங்கள் நண்பர்கள் சூழ பிறந்தநாளை கொண்டாடியிருப்பீர்கள்.
உங்கள் மனைவியுடனும் மகனுடனும் மகளுடனும் ஆனந்த யாழை மீட்டாவிட்டாலும் ஆனந்தமாக இருந்திருப்பீர்கள்.
அந்த பாக்கையம் உங்கள் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் இன்று அது கிட்டாமல் போய்விட்டது. உங்களுடன் சேர்ந்து சாப்பிட்ட நண்பர்கள் இன்று உங்களை எந்த அளவுக்கு நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஆனால், தனிமரமாய் விட்டுப்போன உங்கள் பிள்ளைகளையும் மனைவியை நீங்கள் வாழும் உலகத்தில் இருந்து பார்க்கிறீர்களா? நினைத்து பார்க்கிறீர்களா?
நீங்கள் போன பிறகு அன்றாடத்தை தள்ள அவர்கள் என்ன சிரமப்படுகிறார்கள் என காண்கிறீர்களா?
உங்கள் இரு மகவுகளையும் காப்பாற்ற உங்கள் மனைவி என்ன பாடுபடுகிறாரோ என்று நினைத்து பார்க்கிறீர்களா?
நீங்கள் அள்ளி அள்ளிக்கொடுத்த நண்பர்கள் நீங்கள் இல்லாத குடும்பத்துக்கு எதாவது உதவிகிறார்களா என நீங்கள் கேட்க மாட்டீர்கள். அது உங்கள் இயல்பும் அல்ல. ஆனால் அவர்கள் உங்களை அவழி அனுப்பி வைத்த கையோடு போனவர்கள் தான். இன்னும் உங்கள் வீடு திரும்பி பார்த்ததில்லை.
உலக வழக்கம் போல் உங்கள் மனைவிதான்குழந்தைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால்...உங்களைபோல் சில அண்ணன்கள்,தம்பிகள்இருக்கிறார்கள்.அவர்களாவது உணரட்டுமே என்றுதான்.
திரையிசைபாடலில் உங்கள் இடத்தைநிரப்ப யாரும் இன்னும் வரவில்லை.
இருக்கும் இடத்தில் மகிழ்ந்திருங்கள்.
வாழ்த்துகள் எப்படி சொல்வது....இன்னும் கொஞ்சநாட்கள் வாழ்ந்திருக்கலாம் உங்கள் வரிகளைநேசிக்கும் ரசிகர்களுக்காகவும் உங்கள் இரண்டு பிள்ளைகளுக்கும் மனைவிக்குமாவது.
கசியும் கண்ணீரை உங்கள் பாடல் வரிகள் கொண்டே துடைக்க வேண்டும் நண்ப.
No comments:
Post a Comment