Thursday, July 12, 2018

S.p udayakumaran

*மதிப்பிற்குரிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு....*

தூத்துக்குடி மக்கள் சார்பில் தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்பும் தகவல்கள்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மே 22 ல் நடந்த *கார்பரேட்* (ஆதரவு)  *படுகொலையில்* இன்னுயிர் ஈர்த்த எங்களது உடன்பிறவா சகோதர சகோதரிகளின் ஈரம் காய்வதற்குள்  தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமலும் தமிழக அரசின் அரசாணையை மதிக்காமலும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல நேற்றிலிருந்து 11.07.18 மறைமுகமாக அனுமதி வழங்கியது  நியாயம் தானா ?

*தங்களின் கவனத்திற்கு வரவில்லை என்றால் தற்போது நாங்கள் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்களா ?*

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மின்இணைப்பு மீண்டும் கொடுக்கப்பட்டு பராமரிப்பு பணியை தடையின்றி நடத்த உதவுவது யார் ?

சீல் வைத்திருக்கும் ஆலைக்கு நிரந்தர பணியாளர்களை தடையின்றி நுழைய அனுமதித்து வந்த நிலையில் நேற்றிலிருந்து  நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிளாளர்களை பணிசெய்ய ஆலைக்குள் அனுமதித்தது யார் ?

*ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையர் துணை போகிறாரா ?*

ஸ்டெர்லைட் நிறுவனம் நேற்றிலிருந்து அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆள் எடுத்து ஆலையின் உள்ளே பராமரிப்பு பணிகள் கையாண்டு வருவது  மக்களாகிய எங்களுக்கே தெரியும் போது தங்களுக்கு தெரியாதென்றால் தூத்துக்குடி மக்களின் நலனில் தாங்கள் காட்டும் அக்கறை அவ்வளவு தானா ?
*( தாங்கள் தூத்துக்குடி மக்களுடனும் மக்களுக்கான அரசுடனும் இருக்கிறீர்கள் என்றால்  ஸ்டெர்லைட் ஆலையின் அனைத்து வாசலுக்கும் சீல் வைக்கவும் )*

தங்களின் மேலான கவனத்திற்கு ...
பல டேங்கர் லாரி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்கிறது.... குறிப்பாக
*TN 51 Z 5931*
*TN 23 AL 0376*

துரித நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

*தூத்துக்குடி மக்களின் போராட்டம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவரை தொடரும்.*

என்றும் மக்களுக்காக மக்கள் நலனில் அக்கறையுடன்.....

*ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்*

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...