தகவல் உரிமை ஆணையத்தின் வருடாந்திர அறிக்கைகள் கடந்த மூன்று வருடங்களாக வெளியிடப்படாததால் அறப்போர் இயக்கம் சார்பாக RTI மூலம் தகவல் ஆணையத்திடம் விவரங்கள் கடந்த மே மாதம் 11ம் தேதி கேட்கப்பட்டது. அதற்கு ஜூன் 8 அன்று பதிலளித்த தகவல் ஆணையம் 2015ம் ஆண்டிற்கான அறிக்கை ஏற்கனவே சட்டசபைக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அதன் நகலை இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறது.
ஆனால் கடந்த ஜூலை 9ம் தேதி தான் சட்டசபையில் 2015ம் ஆண்டிற்கான அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நேற்று இரவு வரையிலயும் அந்த அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
இதிலிருந்து மக்களுக்கு தகவல்களை பெற்றுத்தர வேண்டிய தகவல் ஆணையமே பொய் சொல்லி பதில் கொடுத்திருப்பது தெளிவாகிறது. ஆளுங்கட்சியினர் ஊழல் அதிகாரிகளை காப்பாற்றுவதும், அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு துணை போவதும் தமிழகத்தில் மிகவும் சாதாரணமாக நடந்து கொண்டு வருகிறது. தற்பொழுது துணிந்து பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களை காப்பாற்றிக்கொள்ள ஜோக் ஆயுக்தா சட்டமும் கொண்டு வந்து விட்டார்கள்.
2016 மற்றும் 2017ம் ஆண்டு அறிக்கைகள் எப்பொழுது வெளிவரும் என்று யாருக்கும் தெரியாது.
No comments:
Post a Comment