துரோகத்தில் இது பச்சைத் துரோகம்
*
"என் பாட்டன் ராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு வந்ததைத் தவிர வேறு எந்தத் தவறையும் செய்ய வில்லை”
இதுக்கு மேல என்னய்யா பண்ணனும்?
விட்டா இன்னும் கொஞ்ச நாளில், ‘தமிழர்களைக் கொன்றதை தவிர ராஜபக்சே என்ன தவறை செய்தார்?’ என்பார்கள் போலும்.
ராஜாஜி ஆட்சியை வீழ்த்தி பதவிக்கு வந்தது திமுக அல்ல; அதே காங்கிரசில் இருந்த காமராஜர்தான். ராஜாஜி ஆட்சியை நியாயப்படுத்துவது பெருந்தலைவர் காமராஜரை குற்றவாளியாகச் சித்தரிப்பதில்தான் முடியும்.
பார்ப்பனியத்தால்கூடப் பாதுகாக்க முடியாத 'நாலுவர்ண' ராஜாஜியை தமிழ்த்தேசியவாதிகள் நியாயப்படுத்துகிறார்கள்.
இது ராஜாஜி மேல் கொண்ட அன்பல்ல, இதன் மூலம் பார்ப்பனர்களிடம் நற்பெயர் வாங்குவதற்கான தந்திரம். நீங்கள் பார்ப்பனர்களிடம் நற்பெயர் வாங்கலாம்,
ஆனால், ராஜாஜியை ஆதரிப்பது பச்சைத் தமிழர் காமராஜருக்குச் செய்கிற பச்சைத் துரோகம்.
No comments:
Post a Comment