தமிழ் படம் போலீஸ் அத்தியாயம்
அகில உலக சுப்பர்ஸ்டார் என சிவாவுக்கு பட்டமளித்து துவங்கும் இப்படம் கபாலியின் முதல் அறிமுக காட்சி கிண்டலுடன் முடிகிறது
எல்லாமே தமாஷ்தான் என்றாலும் தொடர்ந்து கலகப்பாக 135 நிமிடங்கள் தமாஷ் செய்வது கடினம்தான் …
8 வருடங்களுக்கு முன் முதல் படமாக இப்படத்தை இயக்கிய சி எஸ் அமுதன் இரண்டாவது படம் இன்னமும் வராத நிலையில் இரண்டாவது அத்தியாயமாக இந்த படத்தை ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்
விமர்சனத்திற்கே விமர்சனம் செய்யும் … மீம்ஸுக்கே மீம்ஸ் போடும் ஊடக ஆளுமை காலத்தில் கேட்கும் ஜோக்கெல்லாம் வாட்ஸப்பில் திருடியதாக ஃபேஸ்புக்கில் சுட்டதாக தோன்றும் காலத்தில் சீரியஸாக ஒரு சிரிப்பு படம் வெற்றி பெறுவது எளிதல்ல
நடிக்கத் தெரியாத நாயகன் ஒருவர் கை தட்டல் வாங்குவது போல் தோன்றினாலும் அது எளிதல்ல ... நடிக்க வராது என்பது வேறு .. அது போல நடிப்பது வேறு .. அப்படி நடிக்கும் போது இது வேலைக்கு ஆகுமா கவுத்திறுமா என்ற பயம் வரும் .. அந்த பயம் வெளியே தெரியாத வகையில் நம்பி நடிக்க வேண்டும் ... இயக்குனர் இந்த வகை சினிமாவில் கெட்டி என்றாலும் இதுஇருவருக்கும் இடையே அமைந்த வேதியியல் ...
திரையரங்கம் அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை அதிர்வதற்கு காரணம் சிவா என்கிற நாயகனுக்கு சிந்திக்க தெரிகிறது அதனை செயலாக்க தெரிகிறது கை தட்டலாக மாற்ற தெரிகிறது .. இயக்குனருக்கு அதீத நம்பிக்கை ... தயாரிப்பாளருக்கு அநியாய நம்பிக்கை .. அதையெல்லாம் மீறி அடி வாங்க மாட்டோம் என்கிற அசாத்திய தைரியம் ....
இந்த படத்தில் மாஸ் ரேகிங் ... ஒரே வித்தியாசம் சிறுசுங்க பெருசுகள வச்சு வச்சு செய்யறாங்க ... ஜனங்க சிரிச்சு ரசிச்சு கொண்டாடுறாங்க ..
கோபி அமர் நாத் ஒளிப்பதிவு கண்ணன் இசை இரண்டும் அழகு
பேட்டி கொடுக்கும் போலீஸ் பெண் நிருபரின் தோளில் கை போடும் அவுட் ஆஃப் ஃபோகஸ் காட்சி முதல் .. எங்கெங்கு காணினும் கிண்டல் ..
உலகம் முழுவதும் வெற்றி நிச்சயம்
இருப்பினும் திரை அரங்குகள் டி வி சேனல்கள் இதையெல்லாம் தாண்டி
மாபெரும் வெற்றி டிஜிட்டல் மேடைகளில்தான் இருக்கப்போகிறது .. அமேசான் நெட்ஃபிளிக்ஸ் மற்றும்
You tube சேனலில் 13 பத்து நிமிட காட்சிகளாக பதிவேற்றம் செய்தால் இன்னும் பல பல வருடங்கள் பல கோடி முறை பார்க்கப்பட்டு பல பல கோடி காசு கொட்டும் ... டிஜிட்டல் ரைட்ஸ் வாங்கினவனுக்குத்தான் நிஜ கொண்டாட்டம்
அகில உலக டிஜிட்டல் ஸ்டார் சிவாதான் ... wait and see
No comments:
Post a Comment