Sunday, August 19, 2018

அசோக் கண்ணன்

உட்காரவே முடியாது...படுத்துக்கொண்டே வென்ற அசோக் கண்ணன் !!
----------------

" என்னுடைய நாட்டுக்கோழிப் பண்ணையில் கிடைக்கும் முட்டைகளுக்கு தமிழ்நாட்டில் கிடைக்கும் வரவேற்பை விட இந்தியாவின் பிற மாநிலங்களில் வரவேற்பு அதிகம் . இந்தியாவில்தான் கோடிக்கணக்கான கோழிகள் தங்கள் பாதங்களை மண்ணில் வைக்காமலேயே மடிந்து விடுகின்றன.

என்னுடையப் பண்ணையில் கோழிகள் சுதந்திரமாக சுற்றி வரும். 24 மணி நேரம் நிலத்தில் ஒரு டிராக்டர் செய்யும் செயலை, மண்ணில் வளரும் கோழிகள் செய்யும்.

"ஆடு மாடுகளுடன் கோழிகளை வளர்கக்கூடாது" என்று கால்நடை பல்கலைக்கழகங்கள் பொய் சொல்கின்றன. பலலுயிர் வளர்ப்பு என்பது நம் ஆதிக்கலை. கோழிகள் பூச்சிப்புழுக்களை மட்டுமே உண்ணும். நாம் தான் நம் வசதிக்காக அவற்றை தாவிர உண்ணிகளாக மாற்றினோம்.

உங்களிடம் ஒரு ஏக்கர் நிலம் இருந்தால்போதும், சிறப்பான முறையில்  நாட்டுக் கோழிப் பண்ணைகளை உருவாக்க நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம்.   அதில்  கிடைக்கும்  முட்டைகளை நாங்களே  8 ரூபாய்க்கு வாங்கிக்கொள்கிறோம். ஒரு முட்டைக்கு உங்களுக்கு 3 ரூபாய் லாபம் கிடைக்கும்.

விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள்  மூலம் வருமானம் கிடைக்காது என்ற பொய்மையை நாம் உடைத்துக்காட்டுவோம். வாருங்கள் தோழர்களே " - அசோக் கண்ணன் 7871606000

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...