கட்டை வண்டியில் காவல்துறை!
ஸ்காட்லேன்ட் யார்டுக்கு நிகழ்ந்த அவலம் !!
-----------------------------------------------------------
சென்னை முழுவதும் "ரோந்துப்பணி" என்றப்பெயரில் வலம் வரும் இந்த ஹைதர் காலத்து வாகனத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா ?
பெருபாலும் இந்த ஏம்புலன்ஸ் வடிவ மினி பஸ் , பழுதாகி சாலையோரங்களில் நிற்பதே அதிகம். "மிகப்பழமையான வாகனம் என்பதால் எரிபொருளை அதன் இஷ்டத்துக்குக்குடிக்கும்" என்று ரோந்துப்பணியில் வலம் வரும் காவலர்களே புலம்புகின்றனர்.
கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் ஒரு ஓட்டுநர் மற்றும் ஒரே ஒரு காவலர் அமர்ந்து பெயருக்கு வலம் வர இத்தனைப் பெரிய வாகனம் தேவையா ?
இப்பழமையான வாகனத்தை பராமரிக்க ஆகும் வீண் செலவு காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் பெரும் சுமை.
குறைந்தபட்சம் ஒரு சைக்கிளில் தப்பிச்செல்லும் குற்றவாளியைக்கூட இந்த வாகனத்தால் துரத்திச்செல்ல இயலாது.
குப்பையில் தூக்கி வீச வேண்டிய இந்த வாகனங்களை என்ன காரணத்துக்காக தமிழக அரசு, காவல்துறை தலையில் கட்டி உள்ளது?
# தாகம் இதழுக்காக ....இரா.வெங்கடேசன்
No comments:
Post a Comment