" சார் ரெண்டுபேரும் ஹெல்மெட் போட்டிருக்கோம். எதுக்கு மடக்கறீங்க? "
" இன்னைக்கு என்ன தேதி ? ஒரு நாளைக்கு 300 கேஸ் டார்கெட். 100 பேருக்கு பைன் போட்டாகனும் ! அந்த துட்லதான் எங்களுக்கு சம்பளமே ! லைசன்ஸ் எடு. இன்ஷ்யூரன்ஸ் எடு ? "
" ஹெல்மெட் போடனும். எல்லா பேப்பரும் வச்சிருக்கனும் சரி. ஏதாவது ஒரு எடத்துல சிக்னல் ஒழுங்கா வேல செய்தா சார்? ஆம்னி பஸ் , லாரி எல்லாம் குறிப்பிட்ட நேருத்துலதான் சிட்டிகுள்ள வரனும். அவங்க ரூல்ஸ மதிக்கறாங்களா சார் ? அவங்ளால தினம்தோறும் கோயம்பேடு பேற ரோட்ல எவ்வளவு டிராபிக் ஜாம்? நீங்க அவங்கள எதுவும் கேக்க மாட்டீங்க ? மொத்தமா மாமூல் வந்தடும்.
டாட்டா மேஜிக் ஷேர் ஆட்டோவுக்கு ரோட்ல ஓட்ட பர்மீட்டே இல்ல . ஒரு நாளைக்கு ஒரு ஷேர் ஆட்டோவுக்கு 100 ரூபா பைன். சென்னையில மொத்தம் எத்தன லட்சம் ஷேர் ஆட்டோ ஓடுது ? அதாவது கொலை செய்யறது குற்றம் ! செஞ்சிட்டு ஜாமின்ல வெளிய வந்துடலாம் ! என்னங்க சார் உங்க சட்டம்? அனைத்து சிக்னல்லையும் டிஜிட்டல் நேரம் பொருத்தனும்னு கோர்ட் சொல்லி பல வருஷமாச்சி ! மதிச்சிங்களா ? "
" ஒரு வீல்ல காத்து கம்மியா இருக்கு ! 100 எடு ! "
- எழில்
No comments:
Post a Comment