Thursday, August 23, 2018

சுபா

சென்னையில் நடக்கின்ற நிகழ்வுகள் சிலவற்றின் அழைப்பிதழ்கள் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. ஏன்?  இன்றும் ஒரு மெட்ராஸ் தின நிகழ்வு அழைப்பிதழ் பார்த்தேன். அதுவும் ஆங்கிலத்தில் தான்.  வந்து கலந்து கொள்பவர்கள் தமிழர்கள் தானே?   இவர்கள் தமிழ் தெரியாத  தமிழர்களா?

ஐரோப்பாவில் ஒவ்வொரு நாட்டிலும் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை அவரவர் மொழியில்தான் வெளியிடுகின்றனர். இது மொழிப்பற்று என்றெல்லாம் பெரிதாகச் சொல்லிக் கொள்ளத் தேவையில்லை. அது தான் இயல்பு.

ஆனால் தமிழருக்கு அதிலும் சென்னையில் இருக்கும் தமிழருக்கு தமிழில் ஒரு நிகழ்ச்சி அழைப்பிதழ் உருவாக்கிப் பகிர்வதில் என்ன பிரச்சனை? ஆங்கிலத்தில்  வெளியிட்டால் தான் மதிப்பும் மரியாதையும் என்ற சிந்தனையா?
-சுபா

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...