Thursday, August 16, 2018

திருமா எனும் சைவச்சிறுத்தை !!

சற்றேறக்குரிய 20 ஆண்டுகளுக்கு முன் .......
----------------------------------------------------------------

சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் வசந்தா கந்தசாமி மீது தொடக்கப்பட்ட வர்ணாசிரம வன்கொடுமை வரம்பு மீறியபோது.... உன் கைகளைப் பற்றி தரதரவென அந்த அக்ரகாரக் காட்டுக்குள் அழைத்துப் போனேன் !

காடு பொசுங்கியது ! பூணூல் அறுந்தது !!

சென்னை செருமன் அரங்கில் நடந்த தமிழகப்பெருவிழாவுக்கு , உன்னை சிறப்பு விருந்தினராய் அழைத்துச் சென்று சிலாகித்தேன் !

அங்கே ஓர் கைகலப்பு! பின்பு உன் பேச்சால் அரங்கத்தில் கையொலிப்பு !

என் உயிர் நண்பனின் தாய்க்கு இரண்டு சிறு நீரகமும் பழுது ! உடனடி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவை ! அனுமதிக்கப்பட்டிருந்த  மருத்துவமனையோ அமைச்சர் சிதம்பரம் உறவினருக்கு சொந்தம் !

நள்ளிரவில் வெளிநாட்டில் இருந்த அமைச்சரிடம் பேசினாய் ! ஆறுதல் சாமரம் வீசினாய் !

இன்னொரு மருத்துவ உதவி.  அப்போது அமைச்சர் செம்மலை சுகாதாரத்துறை அமைச்சர். உன்னிடம் கடிதம் கேட்டேன்...நீ சொன்னாய் ...." என் பேச்செல்லாம் எடுபடுமா செங்குட்டுவன்?
"
" எடுபடும் " என்றேன்!

அமைச்சரிடம் உன் கடிதம் நீட்டினேன்.  உன் பெயரைப்பார்த்த மாத்திரத்தில், தன் அரசுப்பெயரிட்ட  ஓலையில் வெறும் கையெழுத்திட்டு , இப்படிச்சொன்னார் அமைச்சர்...." இதுல என்ன வேணுமோ எழுதிக்கிங்ங தம்பி " என்று !

உன் பலமறியாத யானை நீ ....

பேராசைக்கொள்ளாத பேரரசன் நீ ...

ஓயாமல் வேட்டையாடும் ....சைவச்சிறுத்தை நீ .....

தம்பிகளுக்காக வாழும் போது ....இடையிடையே உனக்கும் வாழுந்துகொள் !

" அண்ணனப்பாக்க நீ ஏன் அடிக்கடி வர மாட்ர? " கடிந்து கொள்வான் யாழ்பாணன். 

" காதலிய...கல்யாணம் எண்ணக்கூடாது !! " என்பேன் நான். 




மோடியை திரும்பிப்பார்க்காத கலைஞர்..உன்னை முறைத்துப்பார்த்தார்...

தினம்தோறும் நீ கலைஞரைப்பார்க்கச் சென்றிருந்தால்  ....அவர் உயிர் பிழைத்திருப்பார் போலும் ....

தடய அறிவியல் நிபுணராய் தொடங்கியது உன் வாழ்வு ....இப்போதும் அதையேதான் செய்துகொண்டிருக்கிறாய் ....ஆம் , அரசியல் தடய அறிவியல்!!

"தாகம் " இதழின் ஆலோசகருக்கு  நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!!

- அன்புத்தம்பி தாகம் செங்குட்டுவன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...