Thursday, August 16, 2018

நாச்சியாள் சுகந்தி

விசிக தலைவர் தொல்.திருமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இன்னும் இரண்டு வருடங்களில் 60 வயதில் அடியெடுத்து வைப்பார். 2020-ல் அவர் தமிழகத்தின் முதல்வராக இல்லாவிட்டாலும் துணை முதல்வராகவாவது இருப்பார்;இருக்க வேண்டும். அதுதான் சமூகநீதி.

25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இயக்கத்தை வழி நடத்தி, தமிழக பட்டியல் இன தலைவராக ஏதோ ஊரில் சேரியில் வாழும் கடைசி மனிதனின் நம்பிக்கையாக உருவெடுத்திருக்கும் ஒரு தலைமையின் ஆளுமையை, அறிவாற்றலை பயன்படுத்திக்கொள்வதுதான் சாதியை ஒழிக்க நினைக்கும்  அனைவரின் கனவு ஆகும்.

வெறும் 8, 10 சீட்டு கொடுத்து இன்னும் அத்தலைமையை அவமதிக்காமல் இருப்பதே சமூக நீதி பேசும் கட்சி தனக்குத் தானே செய்துகொள்ளும் நீதி-சமூகநீதி.
#HBDThiruma
#ThirumaforCM

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...