Wednesday, August 22, 2018

முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஜேம்ஸ் வில்சனின் பொய்களும் வீரப்பனின் விளக்கமும்
------------------------------------------------------------

கேரளா வரலாறு காணாத மழையால் பெரும் வெள்ள சேதத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்தும் முல்லைப் பெரியாறு அணையை முன்பே திறந்திருந்தால் வெள்ளத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். குறிப்பாக ஜேம்ஸ் வில்சன் என்ற நபர். ஆனால், தமிழக அரசின் முன்னாள் சிறப்பு தலைமைப் பொறியாளரான வீரப்பன் இதை மறுக்கிறார்.

"கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. கேரளாவில் இருந்த பெரிய அளவிலான மழைப் பொழிவும் ஆறுகளில் நீர் பெருகியதும்தான் வெள்ளத்திற்குக் காரணம். இந்த வெள்ளத்திற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள இந்த அணை அமைந்திருக்கும் நிலவியலைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் கீழே அமைந்திருக்கிறது இடுக்கி அணை. முல்லைப் பெரியாறு அணையை கேரளா பக்கமாகத் திறந்தால், அந்த நீர் 50 கி.மீ. தூரம் பள்ளத்தாக்கில் பயணித்து இடுக்கி அணையை அடையும். இந்த ஆண்டு முல்லைப் பெரியாறு அணை நிரம்புவதற்கு முன்பாகவே இடுக்கி அணை நிறைந்து, திறந்துவிடப்பட்டுவிட்டது. ஆகவே பெரியாறு அணையிலிருந்து நீரைத் திறந்தால் அது கூடுதலான சுமையைத்தான் இடுக்கி அணைக்குத் தந்திருக்கும். முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்கிவைத்துக்கொண்டால் அது இடுக்கி அணைக்கு இருக்கும் நெருக்கடியை குறைக்கும்."

ஜேம்ஸ் வில்சன் போன்றவர்கள் கிளப்பிவிடும் வதந்திகள் பலவற்றுக்கு இந்தப் பேட்டியில் பதில் சொல்லியிருக்கிறார் வீரப்பன். லிங்க் முதல் கமெண்ட்டில்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...