மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய வேண்டுகோள் !!
-------------------------------------------------------------
ஒரு மாபெரும் தலைவரின் இறுதி நாள்கள் , மக்கள் அவருக்காக வருந்தும் நாள்களாக இருக்க வேண்டும். தி.மு.க ஊடகத்துக்கு தந்த அதீத சுதந்திரத்தின் காரணமாக, மக்களின் மனநிலை வேறுவிதமாக மாறி உள்ளது.
நேற்று ஊடகங்கள் செய்த Breaking News அலப்பறைகளாலும் , இன்றைய ஆட்டோ , வாடகை கார் மற்றும் வேன் ஓட்நர்களின் வேலை நிறுத்தத்தாலும் பள்ளிக் கல்லூரி மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் பொது மக்களின் வெறுப்பு அநியாயமாக நோயில் துடிக்கும் கலைஞர் மீது பாய்ந்தது வேதனையான செய்தி.
பெரும்பாலான மக்களுக்கு இன்று ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் என்றே தெரியாது.
தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உடனடியாக செய்ய வேண்டியது ஒன்றுதான். கலைஞரின் சிகிச்சை குறித்து ஊடகங்களுக்கு செய்தி தரக்கூடாது. ஊடகங்களின் Breaking News கலைஞர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பை மிகப்பெரிய அளவில் Break செய்து வருகிறது என்பதை அவர் உணர வேண்டும்.
ஜெயலலிதா இறுதி நாள்களை அ.தி.மு.க ரகசியம் காத்ததுபோல் , கலைஞரின் தற்போதைய சிகிச்சைகளில் ரகசியம் காப்பதில் தவறேதும் இல்லை.
மக்களின் அன்றாட வாழ்வை சிதைக்கும் பொறுப்பற்ற ஊடகங்கள் உள்ள நாட்டில், சில நேரங்களில் மக்கள் நன்மைக்கருதி சில அதீத ஜனநாயகங்களை , சுதந்திரங்களை சற்று இறுக்குவதில் தவறேதும் இல்லை.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவனின் இறுதி நாள்களை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள் .
- தாகம் செங்குட்டுவன்
No comments:
Post a Comment