Wednesday, August 8, 2018

சமஸ்

நான் கற்ற காந்திதான் எல்லா பலங்கள், பலவீனங்களூடாக கருணாநிதி எனும் மகத்தான தலைவரை அடையாளம் காண எனக்கு உதவினார். தூய்மைவாத திமிரிலிருந்து என்னை மீட்டெடுத்தார்.  வெறும் வார்த்தைகளினூடாக அல்லாமல், கள அரசியலினூடாக அரசியலைப் பார்க்க கற்றுக்கொடுத்தார். இந்திய வரலாற்றில் கருணாநிதிக்கு உரிய இடத்தை வழங்குதல் என்பது ஒரு விமர்சகனின் தார்மிகத்தோடு சம்பந்தப்பட்ட விஷயம் என்றே நான் நினைக்கிறேன். உதாரணமாக  சாதியத்திமிரிலிருந்தோ மேட்டிமைவாத அகங்காரத்திலிருந்தோ வெளியேறாத ஒரு மனதால் கருணாநிதியை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது - நிச்சயமாகச் சொல்வேன் அரசியலில் கருணாநிதி ஒரு தலித் - சாதிய / மேட்டிமை மனம் அவரை நிராகரிப்பதற்கான காரணிகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும். கருணாநிதி உயிரோடு இருக்கும்போதே அவரைப் புரிந்துகொள்ள முடிந்ததில், அவருக்கான மரியாதையைச் செலுத்த முடிந்ததில் சின்ன திருப்தி இன்று மனதில் இருக்கிறது; இல்லையென்றால் குற்றவுணர்வு காலத்திற்கும் சாகடித்திருக்கும். அவருக்குச் சொல்ல இன்று ஒரு சொல் மட்டுமே மிச்சமிருக்கிறது - நன்றி!
தெற்கில் உதித்த சூரியனே போய் வா...
தமிழ் என்றும் வெல்லும்!

#thanksmk

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...