Saturday, September 1, 2018

வெங்கட் சுபா

எனக்கு  அல்சைமர் இன்னமும் தாக்காத நிலையில் சில நினைவலைகள் ...
அப்போது விக்ரம் பிரபுவுக்கு வயது 8 இருக்கலாம் .. 1994 ... டூயட் திரைப்படம் படப்பிடிப்பு .. பிரகாஷ் ராஜ்ஜை நான் சந்திக்கிறேன் .. பிரபு அறிமுகம் செய்து வைக்கிறார் .. வெங்கட் இவர் பெயர் பிரகாஷ் ராய் .. பிரகாஷ் ராஜ் என கே பி மாற்றி உள்ளார். எழுதி வைத்துக் கொள் இந்த பிரகாஷ் ராஜ் நிச்சயம் பெரிய நடிகனாக வலம் வருவான் என்கிறார்.. அன்று மாலையே அவரை அம்மா கிரியேஷன்ஸ் அலுவலகத்திற்கு அழைக்கிறேன் .. அம்மா சிவாவுடன் ஒரு உரையாடல் .. சிவா அவரை 3 படங்களுக்கு ஏதோ ஒரு கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு ஒரு பெரிய முன் பணம் தருகிறார் .. அன்று முதல் பிரகாஷ் ராஜ்ஜின் இரண்டாவது வீடு அம்மா கிரியேஷன்ஸ்தான் .. அவர் நிதம் வருவார் .. பொழுது போக்குவார் .. அடுத்தடுத்த பட வெளியீட்டுக்கு காத்திருப்பார். வளர்ந்தார் .. தனியே அலுவலகம் அமைத்தார் .. ராதா மோகனை பெரிதும் ஆதரித்தார்.. அவர் முதல் முறை கதாநாயகனாக  நடித்த படம் ஸ்மைல் ப்ளீஸ் என்கிற அனந்த கிருஷ்ணா என்கிற திரைப்படம் இன்னமும் வரவில்லை .. ஆனால் ராதா மோகனின் வாழ்க்கை டூயட் மூவீஸில் தொடங்கிற்று ..

அப்போதெல்லாம் அவருக்கு தெரியாது அவர் தன் குரு கே பி அவர்கள் இயக்க ஒரு படம் தயாரிப்பார் என ...
அப்போதெல்லாம் அவருக்கு தெரியாது முதல் பட நாயகன் பிரபுவின் மகனை வைத்தே ஒரு படம் தயாரிப்பார் என ....
ஆச்சர்யங்களும் திடுக்கிடும் திருப்பங்களும் கொண்ட விறுவிறுப்பான ஒரு திரைக்கதைதான் அவர் வாழ்க்கை எனவும் அவருக்கு தெரியாது ...
ஆனால் திரும்பி பார்க்காமல் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு செல்லும் வித்தை தெரிந்தவர்தான் பிரகாஷ் ராஜ் ...

அப்படி இருபத்தி ஐந்தாம் வருட திரைப்பட வாழ்க்கையில் பிரகாஷ் ராஜ் தயாரித்திருக்கும் படம் ....

                 .....        60 வயது மாநிறம்      ...

ராதா மோகன் ஒரு வழக்கமான ஃபார்முலா இயக்குனர் .. அந்த ஃபார்முலாவுக்கு பெயர் எளிமை ...
விஜி ஒரு சாதாரண வசனகர்த்தா ... அந்த சாதாரணத்திற்கு பெயர் பளிச் பளிச் ...
குமரவேல் ஒரு வழக்கமான  நடிகர் போல தோன்றி தோற்று விட்டு சிறந்த நடிகராகவே சாதிக்கிறார்..
இந்த பிரகாஷ் ராஜ் சாதா சாமானியனாக நடிப்பதில் ராட்சசன் ... சாமானியடு காது ...
சமுத்திர கனி தன்னை நடிகனாக நினைக்காது கலக்கும்  கபட வேட தாரி ..
இளையராஜா பழைய பாடல்களுக்கு காப்பி ரைட் கேட்கும் நியாயம் இந்த பட பாடல்களில் தெரிகிறது..
விக்ரம் பிரபு தன் கும்கி யானை அல்லது நடிப்பு யானை அருகில் இருந்தால்  மிளிர்வார் என்பது  நிரூபணம்  ஆகிறது  ,,,
இந்துஜா மற்றும் பலரும் நடிக்க தெரியாமல் இயல்பாக இருந்து விட்டு போகிறார்கள் ...
ஒளிப்பதிவாளர் நல்ல ஓவியர் என்பதை தவிர சொல்ல எதுவும் இல்லை ..
பட தொகுப்பு just cut and paste அல்ல correct cutting and concrete pasting ...

ஓட்டைகள் ஏராளம் ... வழக்கமான பதபதப்பும் ஏராளம்தான் ... படபடப்பின்றி யோசிப்போம்
மா நிறம் என்பது கொடுப்பினை .. 60 வயது என்பது முன் ஜென்ம  கர்மா ...

அல்சைமர் என்பதுவும் ஒரு வகையில் கொடுப்பினை ..

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...