Monday, September 10, 2018

சமஸ்

இந்திய அரசு தொழில்மயமாக்கலில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. ஆனால், தொழில் சிந்தனையை மக்களிடம் உருவாக்குவதில் எந்த அளவுக்கு அது அக்கறை காட்டியிருக்கிறது?  எந்த அளவுக்கு மக்களின் நியாயமான சந்தேகங்களுக்கு, அச்சங்களுக்குப் பதில் அளிக்க முற்படுகிறது?

பிரிட்டனில் தொழில்மயமாக்கல் நடந்த காலகட்டத்தில் காபி ஹவுஸ்களில் நிகழ்த்தப்பட்ட தொழில்மயமாக்கல் குறித்த விளக்கவுரைகள், அறிவியல் செயல்விளக்கங்களை இங்கே நினைவுகூரலாம். தொழில்மயமாக்கல் காலகட்டத்தில்தான் அங்கே கல்வி, சுகாதாரத்துக்கான பொதுச் செலவுகள் அதிகமாக்கப்பட்டிருக்கின்றன. தொழில் அறிவொளிக்கும் அறிவியல் புத்தொளிக்குமான காலகட்டமாகவும் தொழில்மயமாக்கல் காலகட்டமே அங்கு இருந்திருக்கிறது. இங்கே நடப்பதென்ன? கல்வி, சுகாதாரத்துக்கான செலவினங்கள் குறைக்கப்படுகின்றன. அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கிறது. தொழில்மயமாக்கலைக் கேள்விக்குள்ளாக்குபவர்கள் தேச விரோதிகளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதிவேக கார்களுக்காக எட்டு வழிச் சாலைகள் அமைக்கப்பட சாமானியர்களுக்கான நடைபாதைகளோ மேலும் மேலும் சுருங்கி ஆவியாகின்றன.

எங்கு தொடங்கும், எங்கு அறுந்துபோகும் என்று தெரியாத, காலோடு ஆளை வாரி இழுத்துவிடக்கூடிய பள்ளங்கள் நிறைந்த, மரங்களும், மின் கம்பங்களும், அரசியல் கட்சிகளின் விளம்பரப் பதாகைகளுக்கான அடிக்கம்பங்களும், பாலங்களின் தூண்களும் குறுக்கிடக்கூடிய, நடக்க முற்படும் ஒரு சாமானியனை எந்த நேரத்திலும் கொன்றுவிடும் அபாயம்மிக்க நம்மூர் நடைபாதையை நினைத்துப்பார்க்கையில், அது வெறுமனே நம்முடைய ஆளும் வர்க்கத்தின் அறியாமையாகவோ, அசட்டையாகவோ தெரியவில்லை. ஒட்டுமொத்த இந்தியக் குடிமைச்சமூக மனநிலைக்கான, சாதாரண மக்களின் மீதான நம்முடைய அலட்சியத்துக்கான ஒரு குறியீடுபோலவே தெரிகிறது!

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...