Friday, September 14, 2018

வன்னி அரசு

அண்ணா...
அண்ணா...
.......................
தமிழீழ விடுதலைப்போராளி
கேணல் திலீபன்
இந்திய வல்லாதிக்க இராணுவத்தை
எதிர்த்து உண்ணாநிலை அறப்போரை
துவங்கிய நாள் இன்று செப்டம்பர் 15.

அமைதிப்படை என்கிற
பெயரில் போன
இந்திய ராணுவம் யாழ் மண்ணில்
கால் வைத்ததும்,
தமிழ் பெண்களை வல்லுறவு கொண்டது,
இளைஞர்களை படுகொலை செய்தது.
மாணவர்கள், குழந்தைகள் என்று கொன்றழித்தது.
அதாவது, சிங்கள ராணுவம் என்ன கொடுமைகளை - அடக்குமுறைகளை
செய்ததோ அதைவிட அதிகமாக,
இந்திய ராணுவம் செய்தது.

இந்த அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட
கேணல் திலீபன் 5 கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாநிலையை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு
முன்புள்ள மைதானத்தில் உண்ணாநிலையை துவங்கினார்.

1.இந்திய  அமைதிப்படையின் துனையோடு ஊர்காவல்படை என்ற பெயரில் சிங்களருக்கு வழங்கபடும் ஆயுதங்கள் திரும்ப பெறப்பட்டு வெளியேற வேண்டும்
2.பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ள போராளிகளை விடுதலை செய்ய வேண்டும்.
3. புனர் வாழ்வு என்ற பெயரில் நடத்தப்படும் சிங்கள குடியேற்றங்களை
தடுத்து நிறுத்த வேண்டும்.
4.வட- கிழக்கு மாகாணங்களில் திறக்கபடும் காவல் நிலையங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
5.இடைக்கால அரசு நிறுவப்படும் வரை சகலவிதமான வேலைகளும் நிறுத்தபட வேண்டும்.

இந்த 5 கோரிக்கைகளை
செப் 15 ம் நாள் உண்ணாநிலையை
துவங்குகிறார் கேணல் திலீபன்.
12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல்
செப்டம்பர் 26 அன்று வீரச்சாவடைகிறார்.

அகிம்சை தேசம்
காந்தி தேசம்
என்று பெருமை பட்டுக்கொள்ளும்
இந்திய தேசத்தின் மீது
காறி உமிழ்வது போல
உண்ணாவிரதம் இருந்து சாகிறார்
திலீபன்.

திலீபன் அண்ணா
திலீபன் அண்ணா
என்று
யாழ் மைதானம்
ஒலித்துக்கொண்டே
இருக்கின்றன.

திலீபன் இறுதியாக பேசும் போது
“ மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
தமிழீழம் மலரட்டும்”

கேணல் திலீபன் அண்ணாவின்
கோரிக்கைகள் இன்னும்
நிறைவேறவில்லை.

இந்தியா கொன்றழித்த
போராளிகள் எத்தனை எத்தனையோ....
இந்தியா இனப்படுகொலைக்கு துனை போன நாடு.
இந்தியாவில் பிறந்ததற்காக
வெட்கபடுகிறேன்.

கேணல் திலீபன் முன் வைத்த
அந்த தமிழீழத்தை மலர வைக்க
இந்த நாளில் உறுதி ஏற்போம்!
                      

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...