Friday, September 28, 2018

பொன் விமலா

தீட்டுத் துணியை சூரியன் பார்வைல படுற மாதிரி வெயில்ல காயப்போட்டு பயன்படுத்தினா தேள் வரும்னு சொன்னாங்க. அப்போலாம் சொன்ன பேச்சைக் கேட்கலை. சொன்ன மாதிரியே தேளும் வந்துச்சு.
அப்புறம் தீட்டு பூட்டெல்லாம் முடிஞ்சு குளிச்ச பிறகு தான் சமையக்கட்டுக்குள்ள சேத்தாங்க. அடுப்புக்கு பக்கத்தில இருந்து புஸ்ஸூனு ஒரு சத்தம். என்னடா இது பால் பொங்கிருச்சோனு பாத்தா ரெண்டு அடி நீளத்துக்கு கட்டுவிரியன் பாம்பு ஒன்னு விறகு கட்டுக்குள்ள இருந்து வெளிய வருது.

அப்போ நான் சின்ன பொண்ணு தானே.  எங்க ஆயாகிட்ட கேட்டேன். ஆயோவ்... ஆயோவ் சின்ன புள்ளைங்க சுத்தமா இல்லனா தேளு வரும். கன்னித் தீட்டுனு சொன்னியே... இப்ப பெரிய பாம்பே போகுதே... அப்போ பெரிய தீட்டு யாரு இங்கன்னு கேட்டேன். வெறகு கட்டையை தூக்கிட்டு தொரத்த ஆரம்பிச்சுச்சு. அதுல இருந்து தேளாவது பாம்பாவது சமையக்கட்டுக்குள்ள மூணு நாள் போக முடியாதுன்னா, அப்புறம் என்ன தீட்டு கீட்டு. மூக்கைப் பிடிக்க நல்லி எலும்பும் நாட்டுக் கோழி முட்டையும் சாப்பிட்டுட்டு ஒரு நாலு மணி நேரம் கழிச்சு, வீட்ல இருக்கிற எல்லாத்தையும் தொட்டு கிட்டு முடிச்சப் பிறகுதான் சாவகாசமா போய் இன்னிக்கு தலைக்கு ஊத்திக்கிட்டேன்னு சொல்லுவேன்.

ஒரு பகலாச்சும் சம்பிரதாயம் இல்லாத மாதவிடாய் வாழ்க்கை வாழ்ந்துடுவேன். நானெல்லாம் சொந்த வீட்லயே தீட்டுன்னு சொல்ற மாதவிடாயை மறைச்சிருக்கேன். சாமி கண்ணைக் குத்தும்னு சொன்னாங்க. அதுக்கே பயபடல. தீர்ப்புக்கு நான் என்ன கருத்து சொல்லப் போறேன் !

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...