* இந்தியாவிலேயே தலா ஆயிரம் பேருக்குக் கூடுதல் மருத்துவர்களைக் கொண்ட மாநிலம் - தமிழ்நாடு.
* உலக சுகாதார நிறுவனம் 1000 பேருக்கு 1 மருத்துவராவது இருக்க வேண்டும் என்கிறது. நம்மிடம் 4 மருத்துவர்கள் இருக்கிறார்கள். இது கனடா, நார்வே ஆகிய வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது.
* கர்நாடகாவின் 40% மருத்துவர்கள் பெங்களூர் மாநகரில் மட்டும் குவிந்து உள்ளார்கள்.
இதைப் போன்று பல மாநிலங்களில் ஊரகப் பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லை.
ஆனால், மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கட்டியுள்ள தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகள் முழுதும் அரசு மருத்துவச் சேவைகள் உள்ளன.
69% இட ஒதுக்கீட்டின் மூலம் இவற்றில் அனைத்துச் சமூக மக்களும் பணியாற்றுகிறார்கள்.
தமிழகத்தின் வளர்ச்சி பரவலான வளர்ச்சி.
* இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் உறுப்பு மாற்றச் சிகிச்சை உட்பட அனைத்து உயர் மருத்துவ சிகிச்சைகளும் மருந்துகளும் சோதனைகளும் 100% இலவசம்.
70% தமிழகத் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளில்தான் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்.
இதைச் சாதித்திருப்பதால் தான் திராவிடப் பொருளாதாரத்தைப் பெருமிதம் பொங்கப் பார்க்கிறோம். இந்த மருத்துவக் கட்டமைப்பை அடித்து நொறுக்குவதால் தான் நீட்டை எதிர்க்கிறோம்.
No comments:
Post a Comment