Friday, October 26, 2018

முருகதாசா ? திருட்டுதாசா ?

முருகதாசா ? திருட்டுதாசா ?
சறுக்கிவிழுந்த சர்கார் !!
--------------------------------------------------

இயக்குநர் முருகதாசின் " கத்தி " படத்தின் பலக்காட்சிகள் திருடப்பட்டக்காட்சிகள் என்பது நிருபிக்கப்பட்டது. அதே இயக்குநரின் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கும் நிலையில், "சர்கார்" படத்தின் கதையாவது திருட்டுக்கதையல்ல , என்பதை முதலிலேயே உறுதி செய்திருக்கலாம். ஆனால், முருகதாஸ் , இரண்டாவது முறையாக விஜய்யை ஏமாற்றி உள்ளார். பல ஆண்டுகள் கழித்துப் படத் தயாரிப்பில் இறங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் ஏமாற்றி உள்ளார்.

திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவர் இயக்குநர் பாக்கியராஜ் , முருகதாசின் திருட்டுக்குறித்து முழு விசாரணை செய்து , 'சர்கார்' கதை, உதவி இயக்குநர் வருண் 10  ஆண்டுகளுக்கு முன் எழுதி பதிவு செய்த 'செங்கோல்' கதை  என்பதை உறுதி செய்தும், முருகதாஸ் அதை ஏற்க மறுக்கிறார் .

உதவி இயக்குநர் வருண் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அப்டியென்றால் , திரைப்பட எழுத்தாளர் சங்கம் என்று ஒன்று எதற்கு? திரைப்பட சங்கத்துக்கே கட்டுப்படாத முருகதாஸ் மீது  இயக்குநர் சங்கம் ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?

இந்தத் திருட்டுக்கு சன் பிக்சர்ஸ் மற்றும் நடிகர் விஜய் வாய் மூடி அமைதி காப்பது, 'திருட்டு' தாசுக்கு துணை நிற்கும் செயல்.

நடிகர் விஜய் உடனடியாக களத்தில் இறங்கி, உதவி இயக்குநர் வருணுக்கு நியாயம் கிடைக்க வழி செய்யவில்லை என்றால்.....அவர் 'சர்கார்' மேடையில் பேசிய அத்தனை வசனமும் பொய் என்று உறுதியாகிவிடும். தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்த சன் பிக்சர்ஸ், வருணுக்கு நியாயம் வழங்க மறுத்தால் , அது தி.மு.கவை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

முருகதாஸ் எனும் 'திருட்டு' தாசை ....திரையுலகம் விரட்டி அடிக்க வேண்டும்.  இவரால் பாதிக்கப்பட்ட 'அந்த' ஆந்திர நடிகை என்னப்பாடுப் பட்டிருப்பாரோ ?

# தாகம் இதழுக்காக....கரிகாலன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...