Saturday, November 3, 2018

தாகம் செங்குட்டுவன்

உற்றுப்பார்
இருட்டிலும்
நிழலாக நானிருப்பேன்

உடுத்திப்பார்
அந்தச்சேலையை
நூலாக எனை நெய்திருப்பேன்

பாடிப்பார்
பிடித்தப்பாடலை
'ஓராயிரம் பார்வையிலே'

ஆடிப்பார்
படித்த பரதத்தை
வழிந்திடுவேன் உன் வியர்வையிலே

கிள்ளிப்பார்
நீயே உனை
வலியால் நானன்றோ துடித்திடுவேன்

அள்ளிப்பார்
நீரினை
கைகளில் நான்தானே தவழ்ந்திருப்பேன்

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ " தொகுப்பிலிருந்து ...)

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...