Thursday, November 8, 2018

தாகம் செங்குட்டுவன்

கடவுள் மறுப்பாளன் எனக்கும்
மனப்பாடம் உன் ஏசப்பா புராணம்

கைகளில் உடைபடும் ரசத்திற்காக...
உன் கண்களில் பேசும்  திராட்சைகள்

பாப் இசைக்கும் கிறித்துவர்கள் மத்தியில்
போப் மொழிபெயர்த்த திருவாசகம் நீ

பைபில் தவழ்ந்ததை விட மிக அதிகம்
உன் கைகளில் சிரித்தன கவிதை நூல்கள்

உற்று உற்று பார்த்து வியந்திருக்கிறேன்
உன் கழுத்தில் தொங்கிய ஏசுவின் சிரிப்பை

மார்கழி மாதக் குளிருக்கு இதம் தரும்
உன் வீட்டில் ஜொலிக்கும் நட்சத்திரம்

தேவாலயங்களைப் பார்க்கும் போதெல்லாம்
உயிர்தெழுகின்றன உன் நினைவுகள்

ஆமென் ஓசைகள் கேட்கும்போதெல்லாம்
உன் "ஆமாம்" தலையாட்டல் தாலாட்டு

தாய் மதத்திற்கு திரும்பும் நாடக இயக்குனர்கள் ...
அறிய வாய்ப்பில்லை காதல் மதம் கடந்தது என்பதை !

- தாகம் செங்குட்டுவன்
( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ? " தொகுப்பிலிருந்து )

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...