Saturday, December 15, 2018

தாமஸ் அருள்செழியன்

மாஃபாவுக்கு ஜீன் உண்டு..!
----------------------------------------
மைக்கை கண்டால் உளறிக் கொட்டும் மக்குகளின் பட்டியலில் கடைசியாய் வந்திருக்கிறார் மாஃபா பாண்டியராஜன் ..

தென்னாட்டு ஐன்ஸ்டீன் செல்லூர் ராஜுவுக்கே சவால் விடும் வகையில் ’ ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு ஜீன் உண்டு’ என்று உளறி  மரபணு விங்ஞானியாய் மாறியிருக்கிறார் மஃபா பாண்டியராஜன்.

ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு ஜீன் உண்டு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் மாஃபா பாண்டியராஜனின் ஜீனைப் பற்றி எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது..

சிவகாசி அருகே ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து படிப்பாலும் உழைப்பாலும் உயர்ந்தவர்தான் இந்த பாண்டியராஜன்.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் வெறும் அறுபதாயிரம் ரூபாய் முதலீட்டில் இவர் துவங்கிய மாஃபா நிறுவனம் இரண்டாயிிரத்தின் துவக்கத்தில் பலநூறு கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்தது..!

மாஃபா பாண்டியராஜன் மனித வள மேம்பாட்டாளராகவும் அறிவார்ந்த மனிதராகவும் சமுகத்தில் வலம் வர ஆரம்பித்தார்..

அதன் பிறகுதான் அவரது ஜீன் தன் வேலையை காட்ட ஆரம்பித்தது..!
.
அதாவது பணம் அந்தஸ்து எல்லாம் வந்து சேர்ந்ததும் மாஃபா வுக்கும் அரசியல் ஆசை வந்தது

முதலில் அவர் தன்னை இணைத்துக் கொண்டது பாரதிய ஜீனதா கட்சியில்.
சில காலம் ஓடியபிறகுதான்  தமிழகத்தில் தாமரை   மலராது என்ற உண்மை அவருக்கு உறைத்தது.

அந்த நேரம் கறுப்பு எம் ஜி ஆர் கொடி கட்ட ஆரம்பித்திருந்தார்.

அடுத்து வரப்போகும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போவது விஜயகாந்தான் என நம்பிய பல அப்பாவிகளின் வரிசையில் தானும் போய் நின்று கொண்டார் பாண்டியராஜன்.

தன் அறிவு ஆற்றல் அனைத்தையும் அடகு வைத்து தே மு தி க வில்  தன்னை இணைத்துக் கொண்ட  மாஃபா பாண்டியராஜன். விஜயகாந்த் தயவில் அங்கு எம் எல் எ வும் ஆனார்.

காலம் மாறியது ஜெயலலிதாவுக்கு அடங்க மறுத்த விஜயகாந்துக்கு இறங்குமுகம் ஆரம்பிக்க நன்றி மறந்து ஜெயலலிதாவை போய் பார்த்து அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து தெ மு தி க அதிருப்தி எம் எல் எ வாக செயல்பட ஆரம்பித்தார் மாஃபா பாண்டியராஜன்.

அதன் பிறகு அடுத்து வந்த தேர்தலுக்கு முன் அதிமுகவிலேயே ஐக்கியமாகி அங்கேயும் சீட் வாங்கி ஆவடி எம் எல் எவாகி அமைச்சராகவும் ஆகிவிட்டார் இந்த மாஃபாய்.

ஜெ மறைவிற்கு பிறகு பன்னீர் செல்வம் வெளியேறிய பின்னர் சசிகலா அணியின் முக்கிய தளபதியாக இருந்தார்  இந்த  மாபாய் பாண்டியராஜன் .

மத்திய பா ஜ க தன் அரசியல் சித்து விளையாட்டை ஆரம்பித்தது.

பன்னீர் செல்வத்தை முதலமைச்சர் ஆக்க நினைத்த டெல்லி காய்களை நகர்த்தியது.

இதை உணர்ந்து கொண்ட மாஃபாவின்  ஜீன்  சசிகலா அணியில் இருந்து அவரை   ஒரே நாளில் பல்டி அடித்து  பன்னீர் அணிக்கு தாவ வைத்தது.

ஆனால் பரிதாபம் பா ஜ க அரசின் கனவு நனவாகவில்லை .

பின்னர் ஐ டி, அமலாக்கத்துறை வீர விளையாட்டுக்களுக்கு பிறகு சசிகலா குடும்ம்பம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு அடிமைகள் அனைவரும் இணைக்கப்பட்ட பிறகு மீண்டும் பன்னீரோடு அமைச்சராகும் வாய்ப்பு மாஃபாவுக்கு கிடைத்தது.

அடுத்து மாஃபா எந்த கட்சியிில் சேருவார் என்பது அவரது ஜீனுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம்.

இப்போதும்  சொல்லுகிறேன்  ஜாதிக்கு ஜீன் இல்லை..
ஆனால் மாஃபாவுக்கு ஜீன் உண்டு..!

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...